காங்கிரஸில் இருந்து தவெகவுக்கு யாராவது சென்றால் அணை போட்டா தடுக்க முடியும்? திருநாவுக்கரசர் கேள்வி

  • திருச்சி: காங்கிரஸ் கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு யார் சென்றாலும் அதை அணை போட்டு தடுக்க முடியாது என திருச்சியில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    Advertisement

    இவ்விழாவிற்கு வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத இடங்களில் பாஜக மற்ற கட்சிகளை உடைத்து ஆட்சியில் அமர்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் இது போன்று நடந்துள்ளது புதிது கிடையாது.

    தேர்தல் கூட்டணிகள் மாறியவுடன் அரசியல் கட்சிகள் மாறி மாறித் திட்டிக் கொள்வது அனாவசியமானது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

    தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என்றுதான் மக்கள் விரும்பி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதற்குப் பிறகு திமுக ஆட்சி குறித்து நான் தனியாக எந்தச் சான்றிதழும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    Advertisement

    டெல்லியில் போராட்டம் நடத்தி உள்ள கரப்பான்பூச்சி கட்சியினர் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எந்த அரசாக இருந்தாலும், ஜனநாயக முறையில் தான் எதிர்கொள்ள வேண்டும்.

    அதேபோல், அரசியல் விமர்சனங்களை விமர்சன ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால், அந்த விமர்சனங்களும் உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும்.

    அரசை விமர்சனம் செய்பவர்கள்
    யாரையுமே கைது செய்யக் கூடாது என்று சொன்னால், நாட்டில் யாராலும் ஆட்சியை நடத்த முடியாது. யார் என்ன சொன்னாலும் சகித்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பதில்லை. சட்டம் ஒழுங்கு சார்ந்த நடவடிக்கைகளை அந்தந்தச் சம்பவங்களின் பின்னணியைப் பொறுத்தே நாம் மதிப்பிட முடியும்.

    Advertisement

    காங்கிரஸ் கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு யார் சென்றாலும் அதை யாரும் அணை போட்டு தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் ஒரு சில துறைகளில் ஊழல் அழிக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதிமுகவில் இருந்து இதுவரை 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். அது போல் ஏராளமான நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளனர். இதைத்தான் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    English Summary

    Congress EX president S.Thirunavukkarasar says that Congress party members joining TVK cannot be stopped at any cost.