இந்தியா கூட்டணியில் தவெக சேர்வதை போல் தெரியவில்லை.. சொல்வது பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்!

  • சென்னை: தவெக விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்துவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற நோக்கம் தவெகவுக்கு இல்லையென்றால், அவர்கள் தேசிய அளவில் புரமோட் செய்ய வேண்டிய தேவை கிடையாது என்று கூறிய தராசு ஷ்யாம், இந்தியா கூட்டணியில் தவெக சேர்வதை போல் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதற்காக சிபிஐ, சிபிஎம், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் பிரதமர் வேட்பாளர் குறித்த மோதல் நீடித்து வருகிறது.

    Advertisement

    சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த போதும் கூட, பிரதமர் வேட்பாளர் குறித்த பதிலை புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கூறவில்லை. ஆனால் மாணிக்கம் தாகூர், பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதில் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார் என்று தெரிவித்தார். ஆனால் தவெக பற்றிய கேள்விக்கு மாணிக்கம் தாகூர் பதில் அளிக்காமல் வெளியேறினார்.

    இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தனியாகவே இயங்கி வந்தது. ஆனால் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. இது சகஜம் தான்.. அப்போது பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருந்தார். அறிவிக்கப்படவில்லை என்றாலும், ராகுல் பிரதமராவார் என்பது அனைவரும் அறிந்தது.

    Advertisement

    ஆனால் தவெகவை பொறுத்தவரை விஜய் தான் அடுத்த பிரதமர் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இன்னும் மீட்டிங்கில் அறிவிக்கவில்லை என்றாலும், சட்டசபையில் சொல்லிவிட்டார்கள். இதனால் காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு தான் குழப்பத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள், வியூக வகுப்பாளர்கள் தவெகவை பற்றி காங்கிரஸ் மேலிடத்திற்கு கூறிவிட்டார்கள்.

    இப்படியான சூழலில் தவெக ஆதரவு கட்சிகள் என்ற பெயரில் தான் கூட்டம் செப்டம்பர் 9ல் நடக்கிறது. தவெக ஆதரவு கட்சியாக காங்கிரஸ் கட்சி பங்கேற்கிறது என்றால், தேசிய அளவிலான கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தவெக நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது. தவெகவை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் சேர்வதை போல் தெரியவில்லை.

    Advertisement

    ராஜ்ய சபா எம்பியை விட்டுக் கொடுத்ததற்கே இந்த நோக்கம் இருக்கும் என்றே நினைக்கிறேன். பிரதமர் வேட்பாளர் விஜய் இல்லையென்றால், தேசிய அளவில் அவரை புரமோட் செய்ய வேண்டிய தேவையில்லை. உண்மையில்லாத விஷயங்களை ஆயிரக்கணக்கான ரீல்ஸாக வெளியிடுகிறார்கள். அது பாகிஸ்தான் வரை சென்றுவிட்டது.

    காங்கிரஸ் கட்சி இன்னும் தவெக இந்தியா கூட்டணிக்கு வந்துவிடும் என்றால், அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சிக்கு இப்படியான விஷயங்கள் எவ்வளவு பெரியது என்று நன்றாக தெரியும். மாணிக்கம் தாகூர் நிதர்சனமான உண்மையை தெரிந்தும், தெரியாதது போல் இருக்கிறார்.

    Advertisement

    தவெக கூட்டணியில் இருந்தால் தான் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பையே தேட முடியும். நடக்கும் சம்பவங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல என்பதே என்னுடையது கருத்து என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Congress: TVK Vijay Unlikely to Join INDIA alliance says Senior Journalist Tharasu Shyam