பாஜகவுடன் ஜோடி சேருங்கள்.. சூரியன் அஸ்தமிக்கட்டும்.. ப்ளூசட்டை மாறன் காட்டமான பதிவு

  • சென்னை : சினிமா விமர்சகரான ப்ளூசட்டை மாறன், அரசியல் கருத்துக்களையும் அதிகமாக வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அவர் போட்ட பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் அவர் கூறுகையில், "தாமரையை நோக்கி நகரும் சூரியன்? தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு வாக்கு அளிக்காமல்.. வாக்களிப்பை திமுக புறக்கணிக்கும். இதனால் அந்த மசோதா நிறைவேறும் என தவெக உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றன.

    Advertisement

    இது நடந்தால்.. திமுக நிரந்தர தேர்தல் தோல்விகளை சந்திக்கும். 'இந்த ஸ்டாலின் உள்ளவரை..' என‌ பேசிய வசனங்கள் வீணாகும். பாஜகவின் வலதுசாரி இந்துத்வா அரசியலுக்கு எதிரான கேடயமாக திமுக இருக்குமென நம்பி வரும் மக்கள் இனி உங்களை கைவிட்டு விடுவார்கள். விஜய் ஆட்சியை வீழ்த்த பாஜகவுடன் கைகோர்க்க நினைப்பது.. திமுகவை மொத்தமாக அழித்து விடும்.

    Advertisement

    மசோதாவிற்கு எதிராக...புறக்கணிப்பு நாடகம் போடாமல்.. எதிர்த்து வாக்களிப்பீர்கள் என நம்பலாம். இல்லாவிட்டால் பெரியாரும், அண்ணாவும் உங்கள் தலைவர்கள் என சொல்வதை நிறுத்தி விடுங்கள்.

    பாஜகவுடன் எந்த காலத்திலும் திமுக நேரடி அல்லது மறைமுக கூட்டணி வைக்காது என‌ மீடியா முன்பு சொல்லும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இன்று உண்டா? இல்லாவிட்டால்... அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை எனும் பச்சோந்தி பழமொழியை கூறி...

    பாஜகவுடன் ஜோடி சேருங்கள். சூரியன் அஸ்தமிக்கட்டும்." இவ்வாறு ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார்.

    பிரச்சனை என்ன

    நாட்டில் கடந்த ஓராண்டாக பெரும் விவாதப் பொருளாகவும், தென் மாநிலங்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான விஷயமாகவும் உள்ள தொகுதி மறுவரையறை மசோதா, கடந்தமுறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது, திமுக,சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள்எதிர்த்து வாக்களித்த காரணத்தால் தோற்றுப்போனது. இந்த மசோதா சட்டமாகாத காரணத்தால் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் தொகுதி மறுவரையறை நடைபெறும் என்று கூறுகிறார்கள். அப்படி நடந்ததால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்கள் மக்களை தொகையை கட்டுப்படுத்திய காரணத்திற்காக பெரிய இழப்பை சந்திக்கும் என்பது வாதமாக உள்ளது.

    Advertisement

    அதேநேரம் தொகுதி மறுவரையறை விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்பது அந்தந்த மாநிலங்களுக்கு தற்போது உள்ள சதவீத அடிப்படையில் தான் ஒதுக்கப்படும் என்று கூறுகிறது. அப்படி நடந்தால் தொகுதி அதிகரிக்கும்.. ஆனால் வடமாநிலங்களில் மட்டுமே வென்று இந்தியாவையே பாஜக ஆள முடியும் என்கிற நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. காங்கிரஸ் பலவீனமாக உள்ளதா பாஜக நிரந்தரமாக இந்தியாவை ஆள இந்த மசோதா வழிவகை செய்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன.

    இதனாலேயே இந்த மசோதாவை சட்டமாக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை .. இப்போது 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தொகுதி மறுவரையறை செய்ய திமுக வலியுறுத்தி வருகிறது. அப்படி செய்தாலும், நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை உயரும். அப்படி உயர்ந்தாலும், வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் உயரும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.

    Advertisement

    ஆனால் தமிழகத்திற்கு குறையும் என்றும் வாதமாக உள்ளது. இந்த மசோதாவை ஒருவேளை திமுக ஆதரித்தால், அது நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், அதுதிமுகவின் அரசியலுக்கு பெரிய சிக்கலாக முடியும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கின்றன. தவெகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக பாஜக உடன் திமுக சேர்ந்தால், அவர்களின் அரசியலுக்கே சிக்கலாக முடியும் என்று அரசியல் நிபுணர்கள் விமர்சிக்கிறார்கள்.

    English Summary

    Constituency Delimitation: Is the DMK Moving Towards the BJP? Blue Sattai Maran's Post