கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் தமிழக அரசு அடுத்த நகர்வு! 5 சவரன் வரம்பில் யார் யாருக்கு பயன்

  • சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த செய்தி மீண்டும் அடிபட துவங்கி உள்ளது.. விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது கூட்டுறவுத்துறையின் இந்த மறுபரிசீலனை நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. ஆம், தமிழகத்தில் முந்தைய அரசால் நிறுத்தப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் வி. காந்திராஜ் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த தகவல், பெரு மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

    Advertisement

    கடந்த 2021ம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அதாவது சுமார் 40 கிராம் வரை அடமானமாக வைக்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் சுமார் 11.7 லட்சம் பயனாளிகளுக்கு 4,904 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    Advertisement

    கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி

    இருந்தாலும், திட்டத்தின் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் முறைகேடு புகார்கள் காரணமாக இந்தத் திட்டம் திமுக அரசால் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, கூட்டுறவுத்துறையை முழுமையாகச் சீரமைக்க முடிவு செய்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் வி. காந்திராஜ், தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு விற்பனை மற்றும் பெட்ரோல் பங்கில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அவர், முந்தைய ஆட்சிக்காலத்தில் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டம் மற்றும் கூட்டுறவுத்துறை சார்ந்த பிற பழைய நலத்திட்டங்களை, தற்போதைய அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய உள்ளதாக உறுதியளித்துள்ளார்.

    Advertisement

    அமைச்சர் வி. காந்திராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசின் "வெற்றிகரமான தமிழகம்" என்ற டார்கெட்டை நோக்கி, கூட்டுறவுத்துறை தனது பொறுப்புகளைச் சரியாகச் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், அரசு முற்றிலும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது..

    5 சவரன் நகை கடன் தள்ளுபடி

    முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகளால் முடக்கப்பட்ட திட்டங்களை அப்படியே கைவிடாமல், அவற்றில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வதே தற்போதைய அரசின் நோக்கம்.

    குறிப்பாக, கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் பழைய திட்டங்கள் அனைத்தும் தற்போது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.. இந்த மறுபரிசீலனை நடவடிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி திட்டமும் முக்கிய முன்னுரிமை பெற்றுள்ளது. தகுதியுள்ள ஏழை எளிய மக்கள் எந்தவித இடர்பாடும் இன்றி இந்தச் சலுகையைப் பெறுவதை அரசு உறுதி செய்ய உள்ளது.

    Advertisement

    மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா

    எந்தெந்த குடும்பங்களுக்குப் பலன் கிடைக்கவில்லை, திட்டத்தில் இருந்த நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன என்பதை முழுமையாக ஆராய்ந்து, அதற்கான தீர்வு விரைவில் அறிவிக்கப்படும்" என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசின் இந்த அதிரடி முடிவு, கூட்டுறவு வங்கிகளின் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதோடு, சாதாரண மக்களின் பொருளாதாரத் தேவைகளுக்கும் பெரும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பொருளாதாரச் சுமையால் தவித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

    English Summary

    Cooperative Bank Gold Jewelry Loan Waiver: Tamil Nadu Govt’s Next Move! Who Will Benefit Under the 5 Sovereign Limit?