Gold loan: கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைக்க போறீங்களா? இனி கிராமுக்கு ரூ 10000!

  • சென்னை: கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை கடனாக கிராம் ஒன்றுக்கு ரூ 10 ஆயிரம் வரை உயர்த்தி வழங்குவதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இத்தனை காலமாக ஒரு கிராமுக்கு ரூ 7000 வரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உயர்த்தி வழங்கப்படுகிறது.

    Advertisement

    இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு கிராமிற்கு ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும். கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12 சதவீத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது.

    Advertisement

    மேலும், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.7,000 என்ற ரீதியில் கடன் வழங்கப்பட்டு வந்தது.

    மேலும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு, மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு 75 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், இன்று (05.10.2026) நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில், நகைக் கடன்கள் தொடர்பாக பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, நகைக் கடன்களுக்கு (Jewel Loan) ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ. 10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவி வந்தது.

    அமெரிக்கா - ஈரான் சண்டையில்.. தங்கத்தின் சட்டை கிழியுது! இது தான் சான்ஸ்.. பட்டுனு வாங்கிப் போடுங்க!

    இதனைச் சீரமைக்கும் வகையில், நகைக்கடனுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) விதிக்கும் வட்டி விகிதம், அதன் கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    அதே நேரத்தில், வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் லாப வரம்பு (Margin) 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் (Renewal) நகைக் கடன்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil nadu cooperative department increases gold loan amount as Rs 10000 per gram. It earlier gave Rs 7000 per gram.