சென்னை: ஓடும் ரயிலில் ஸ்லீப்பர் கோச்சி சக பயணிகள் முன்பு காதல் ஜோடி ஒன்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு செய்த எல்லை மீறி சில்மிஷத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகின்றன.
பொது பயணிகள் பயணிக்கும் ரயிலில் இருக்கிறோம் என்பதை மறந்து, எதோ தனி உலகத்தில் இருப்பது போல தொடர்ந்து எல்லை மீறி நடந்து கொண்ட அந்த காதல் ஜோடியை பெண் ஒருவர் துணிச்சலாக தட்டிக் கேட்ட நிலையில் அவர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
ரயிலுக்குள் காதல் ஜோடி ஒன்று சக பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. ரயிலின் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியில் காதல் ஜோடி ஒன்று பயணம் செய்துள்ளது. பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த அந்த பெட்டிக்குள், மேல் படுக்கையில் காதல் ஜோடி ஒன்று ஒரே இருக்கையில் இருந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டு தங்கள் காதல் கதைகளை பேசி வந்தனர். நேரம் செல்ல செல்ல இளம் ஜோடியின் சில்மிஷங்கள் எல்லை மீறி சென்றன. ரயிலில் இத்தனை பயணிகள் இருக்கிறார்களே.. யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று துளி கூட எண்ணாத அந்த காதல் ஜோடி, ஏதோ தனி உலகத்தில் இருப்பது போல தொடர்ந்து எல்லை மீறி நடந்து கொண்டனர். இதனை பொறுத்து பொறுத்து பார்த்த பெண் பயணி ஒருவர், ஒரு கட்டத்தில் இதற்கு மேல் விட்டால் சரிபட்டு வராது என எண்ணிக்கொண்டு இருவரையும் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? என்று துணிச்சலாக தட்டிக்கேட்டார். இதனால் ஒரு நிமிடம் பதறிப்போன காதல் ஜோடி, பின்னர் மீண்டும் தட்டிக்கேட்ட பெண்ணிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் விடாத அந்த பெண், இத்தனை பேர் முன்னிலையில் இப்படி நடந்து கொள்கிறீர்களே.. ஒழுங்காக பயணம் செய்ய முடியாதா என்று சரமாரி கேள்வி எழுப்பினர். இந்தக் காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் எந்த ஊரில் நடைபெற்றது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வைரல் வீடியோ குறித்து நெட்டிசன்களும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், பார்க், பீச், ரயில் என எந்த பொது இடமாக இருந்தாலும் இதுபோன்ற சிலர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வது குறைந்தபாடில்லை. அவர்களுக்கே நாம் செய்வது தவறு என்று புரிந்தால் மட்டுமே இதுபோன்ற செயல்கள் நிற்கும்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இது உண்மையாகவே நடந்த சம்பவமா? இல்லை வீடியோவிற்காக வேண்டும் என்றே திட்டமிட்டு எடுக்கப்பட்டதா? என்று கூட தற்போது சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. ஏனெனில் தற்போதெல்லாம் டிரெண்டுக்கு ஆசைப்பட்டு பலரும் பொய்யாக வீடியோவை பரப்புவதையும் பார்க்க முடிகிறது" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "தட்டி கேட்கிறேன் என்ற பெயரில் அந்த பெண் இருவரையும் பொதுவெளியில் தாக்குவது போல இருக்கிற்து. அந்த பெண் செய்வதும் தவறு" என்று பதிவிட்டுள்ளார்.இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டு
என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
நெட்டிசன்கள் கருத்து