Irfan: யூடியூபர் இர்ஃபான் கார் மோதி மூதாட்டி பலி! ரூ 30 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

  • செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் யூடியூபர் இர்பான் கார் மோதி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ 30.69 லட்சம் இழப்பீடு வழங்க செங்கல்பட்டு சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    கடந்த 2023 ஆம் ஆண்டு, மே 26 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே யூடியூபர் இர்பானின் சொகுசு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    Advertisement

    விசாரணையில் சென்னை காட்டாங்குளத்தூர் முல்லை நகரைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவர் மீது கார் மோதியதில் உயிரிழந்தார். முதல் கட்ட விசாரணையில் இர்பானின் காரை அசாருதீந் என்பவர் ஓட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து நடந்ததாக கூறி பத்மாவதியின் மகன், மகள் செங்கல்பட்டு சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பத்மாவதியின் குடும்பத்திற்கு ரூ 30.69 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    இர்பான்ஸ் வியூ எனும் யூடியூப் சேனலை தொடங்கிய இர்பான், பல்வேறு ஹோட்டல்களில் உணவு எப்படி இருக்கிறது என்பதை ரிவ்யூ செய்து வந்தார். அவருக்கு 3 மில்லியன் பாலோயர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 10 நாட்களில் தஞ்சையில் மறு வீடு சென்றுவிட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. விபத்தின் போது இர்பான் காரினுள் இருந்தார் என்றும் , அவர் காரில் இல்லை என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

    இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தனது யூடியூப் சேனலில் இர்பான் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், மறுவீட்டை முடித்துக் கொண்டு உறவினர்களுடன் காரில் வந்து கொண்டிருந்த போது மறைமலைநகர் அருகே பேரிகாடுகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அந்த பெண் திடீரென குறுக்கே வந்துவிட்டார்.

    Advertisement

    இதனால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் சிறிய வெளிச்சம் கூட இல்லை. அந்த விபத்தில் ஒரு உயிர் பறிபோனது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனக்கு திருமணம் நடந்து 10 நாட்களில் இது போன்ற ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதை என்னால் ஏற்க முடியவில்லை. நெஞ்சை உலுக்குகிறது. இந்த விபத்தில் எனது காருக்கும் தொடர்புள்ளது என்பதால் அந்த வாகனத்திற்கான இன்சூரன்ஸ் குறித்து ஆய்வு செய்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அவை முடிந்த பிறகு தனிப்பட்ட முறையில் என் சார்பில் உயிரிவந்தவரிந் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறேன் என கூறியிருந்தார்.

    Advertisement

    இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை அரபு நாடுகளில் கண்டறிந்து அதை வெளியிட்டு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து மருத்துவ இயக்கககம் விசாரமை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    English Summary

    Chengleput Court orders Youtuber Irfan to give Rs 30 lakhs compensation for the woman who met with an accident in his car.