சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் கூவத்தூர் அருகே தொழிற்சாலைக்கு பெண்களை வேலைக்கு ஏற்றி சென்ற வேனும் அரசுப்பேருந்தும் மோதி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கூவத்தூர் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பெண்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் தொழிற்சாலைக்கு வேனில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் வேனிலை சென்று கொண்டிருந்தனர். வேன், பையனூர் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மாடு ஒன்று வேனின் குறுக்கே வந்தது. இதனால் மாடு மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் பிரேக் போட்டு வாகனத்தை எதிர் திசையில் திருப்ப முயன்றுள்ளார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து வந்த மாநகர பேருந்து மீது அதிவேகமாக வேன் மோதியது. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.20 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல்அறிந்த வந்த போலீசார், உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள பூஞ்சேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு மாடு குறுக்கே வந்ததது தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன், அரசு பேருந்து மீது மோதியதும் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் கூவத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.விபத்து
3.5 சென்ட் நிலத்தின பட்டாவுக்கு 1.25 லட்சம் லஞ்சம்.. ஊட்டி விஏஓ கைது.. பின்னணியில் எழும் 5 கேள்விகள்
விபத்திற்கு என்ன காரணம்
'சென்னை நங்கநல்லூரில் வேலை செய்தவர் இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்.. யார் இந்த 'நித்யா ராமன்'?