200 யூனிட் கேள்விக்குறியாகும்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

  • சென்னை: மின்சார சட்ட திருத்த மசோதா இதுவரை நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவதற்கான நிர்ப்பந்தங்களை அனைத்து மாநில அரசுகள் மீதும் திணித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு திமுக அரசு இத்தகைய ஒப்பந்த புள்ளிகளை கோரிய போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை கடுமையாக எதிர்த்தது. திமுக அரசும் அதனைத் திரும்ப பெற வேண்டி வந்தது. தற்போது தவெக அரசு அதே பாதையில் பயணிக்கிறது. அனைத்து தரப்பு மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் "ஸ்மார்ட் மீட்டர்" திட்டத்தை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    Advertisement

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது மின் வாரியத்தை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கிற திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். ஆகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இத்தகைய ஒப்பந்த புள்ளி அறிவிப்பினை வன்மையாக கண்டிப்பதோடு அதை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

    Advertisement

    மின்சார சட்ட திருத்த மசோதா இதுவரை நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு ஸ்மார்ட் மீட்டரை பொருத்துவதற்கான நிர்ப்பந்தங்களை அனைத்து மாநில அரசுகள் மீதும் திணித்து வருகிறது.

    2023 ஆம் ஆண்டு திமுக அரசு இத்தகைய ஒப்பந்த புள்ளிகளை கோரிய போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை கடுமையாக எதிர்த்தது. திமுக அரசும் அதனைத் திரும்ப பெற வேண்டி வந்தது. தற்போது தவெக அரசு அதே பாதையில் பயணிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 மண்டலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிற பணியினை துவக்கி உள்ளது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு இருந்தபோது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை அரசு நிறுவனமே தனது மூலதன செலவில் (Capex முறை) சோதனை ஓட்டம் மூலமாக துவக்கியது.

    Advertisement
    அரசு ஊழியர்களின் சம்பளம் ₹1.22 லட்சமாக உயரலாம்.. 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் கணிப்பு என்ன

    ஆனால், தமிழ்நாட்டில் ஒப்பந்த புள்ளிகள் தனியாரிடமிருந்து வரவேற்கப்பட்டு (Totex முறை) செய்யப்படுவதால் இது தனியார் மயத்திற்கான நகர்வாகவே உள்ளது என்பது தெளிவு. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகக் கடுமையானவையாக இருக்கும். முழுக்க முழுக்க மின்சார சேவையை சந்தையின் சூதாட்டத்திற்கு ஒப்படைப்பதே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

    தற்போது நடைமுறையில் உள்ள 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், சிறு குறு தொழில்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், கைத்தறி நெசவு தொழிலுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குறுக்கு மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கப்படும். மின்சாரக் கட்டணம், விநியோகம் மீதான அரசின் கட்டுப்பாடும் கை கழுவப்படும். வணிக நிறுவனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் உச்ச நேரக் கட்டணங்கள் (Peak hour rates) வீடுகள் மீதும் திணிக்கப்படும். இது தவிர மாநில உரிமைகள், சமூக நீதி, வேலைவாய்ப்புகள் மீதும் கடுமையான பாதிப்புகளை தனியார் மயம் ஏற்படுத்தும்.

    Advertisement
    ஆதரவு கேட்ட அஜித் குமார்.. குடும்பத்தை பார்க்கணும் தல.. மீம்ஸ் போட்டு பங்கம் செய்த ரசிகர்கள்

    ஆகவே, அரசின் இத்தகைய முடிவு எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. ஒன்றிய அரசின் நிர்பந்தத்திற்கும், நவீன தாராளமய பொருளாதார பாதையின் அழுத்தத்திற்கும் பணிகிற இம்முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    The Communist Party of India (Marxist) has urged that the "smart meter" scheme, which affects the livelihood rights of people from all walks of life, be abandoned.