சென்னை: தவெக கூட்டணி கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், எந்த சூழ்நிலையிலும் நாங்கள் மந்திரி சபையில் இடம்பெற மாட்டோம். அமைச்சரவையில் சேர்வதற்காக நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் வருகின்ற போது அப்போது இருக்கிற சூழலை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம் என கே பாலகிருஷ்ணன் கூறினார்.
எங்களை பொறுத்தவரை நாங்கள் தெளிவான முடிவு எடுத்துவிட்டோம். எந்த சூழ்நிலையிலும் நாங்கள் மந்திரி சபையில் இடம்பெற மாட்டோம். அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் ஒரு அரசு அமைந்துவிடாமல் போய்விடுமோ என்று தான் நாங்கள் ஆதரவு அளித்தோம். இவங்களை தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.
ஆகவே ஆட்சி அமையால் போய்விடுமோ என்ற காரணத்திற்காக தான் நாங்கள் ஆதரவு கொடுத்தோம். அமைச்சரவையில் சேர்வதற்காக நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை. நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. எனவே நாளைக்கு தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை. ஏற்கனவே நாங்கள் சொல்லிவிட்டோம். போன மாதம் கூப்பிட்டார்கள்.. போகவில்லை. எங்களை பொறுத்தவரை இப்போது நாங்கள் திமுக கூட்டணியிலோ, அந்த கூட்டணியிலோ என எந்த கூட்டணியிலும் இல்லை.. இடதுசாரிகள் கட்சிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்து இருக்கிறோம். இடதுசாரிகள் கட்சிகள் திருச்சியில் அடுத்த மாதம் பேரணி நடத்துகிறோம். அந்த பயணத்தை நாங்க தொடருவோம். தேர்தல் வருகின்ற போது அப்போது இருக்கிற சூழலை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம். இடைத்தேர்தல் தேதி அறிவித்து இருக்கிறார்கள். எங்க கட்சிக்குள் ஆலோசனை நடத்தி தான் நாங்கள் அறிவிப்போம். ஆதரவு கொடுப்பதா இல்லையா என்பதை.. யாருக்கு ஆதரவு கொடுப்பது எல்லாத்தையும் கட்சிக்குள் பேசி முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.