சென்னை: விஜய்யின் தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்.. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம் என முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியிருந்த நிலையில் இது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தவெக ஆட்சி கலைந்துவிடும் என சொல்வது உகந்ததல்ல.. இத்தகைய கருத்துகள் அவருடைய உயரத்துக்கு பொருத்தமானது இல்லை என்று கூறினார்.
விஜய் தவெக அரசு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து வருகிறது. இந்த சூழலில் எப்போது வேண்டுமானாலும் இந்த அரசு கவிழலாம் என முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் கூறியதாவது:-
ஜனநாயகத்திற்காக.. நாட்டு நலனுக்காக.. தமிழ் மண்ணின் உரிமைகளுக்காக.. எங்களால் ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் களமாட முடியும், தனித்தும் களமாட முடியும் என்று இந்த நேரத்தில் நான் பதிவு செய்கிறேன்" என்று கூறினார். அப்போது தவெக ஆட்சி விரைவில் கவிழும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த வீரபாண்டியன் கூறியதாவது:- மு.க ஸ்டாலின் முன்னாள் முதல்வர், பழுத்த அரசியல் தலைவர். கலைஞர் போன்றவர்களிடம் அரசியல் பயின்றவர். ஜனநாயகத்தில் இதுபோன்ற கருத்துகள் ஏற்புடையது அல்ல. இப்போதுதான் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மக்கள் அந்த அரசுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். எனவே, மக்கள் அளித்த தீர்ப்பை நாம் வழிமொழிய வேண்டும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜனநாயக கட்சியின் தலைவர் என்ற முறையில் ஜனநாயகத்தின் வழியில் நிற்க வேண்டும். சட்டப்படி இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் அவர் சொல்ல வேண்டும். எனவே இத்தகைய கருத்துகள் அவருடைய உயரத்துக்கு பொருத்தமானது இல்லை" என்றார். தனிக்கட்சி கண்ட பிறக கூட தமிழக சட்டசபையில் கருணாநிதியை ஒருவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதும், உடனே அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் கண்டித்தார். என்ன சொல்லிக் கண்டித்தார் என்றால், "உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம்.. ஆனால் எனக்குத் தலைவர் கலைஞர்தான்" என்று சொல்லி, அந்த வார்த்தையை வாபஸ் வாங்கச் சொன்னார். இது வரலாறு. ஒரு தேர்தல் முடிந்தவுடன், வெற்றி பெற்ற இயக்கத்தை நோக்கி தான் நிறைய பேர் சேர்வார்கள். ஆனால் இன்று எதிர்க்கட்சியில் நிறைய பேர் சேர்கிறீர்கள் என்றால் பதவிக்காக இல்லை.. கொள்கைக்காக வந்து இருக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகளாக, எந்தத் துறையை எடுத்தாலும், இதுவரை தமிழ்நாடு கண்டிராத வளர்ச்சியை, நம்முடைய தமிழ்நாடு பார்த்தது. சட்டம் ஒழுங்கைப் பற்றிச் சொல்ல தேவையில்லை. பாலியல் கொடுமைகள், போதை மருந்து நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டு, கொள்ளைகள் மற்றும் அராஜகங்கள் என டிவியை பார்த்தாலே, பேப்பரைப் படித்தாலே இந்தச் செய்திகள்தான் நம் கண்களில் படுகின்றன. இன்னொரு பக்கம் மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம்.. தவறு செய்துவிட்டோம் என வாக்களித்தவர்களும் கஷ்டப்படுகிறார்கள்.. வாக்களிக்காதவர்களும் கஷ்டப்படுகிறார்கள். தமிழ்நாட்டைக் காக்கும் பொறுப்பு, கடமை திமுகவுக்கு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டை, சீரழிய விடக் கூடாது. தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. விரைவில் வரலாம்.. 3 மாதங்கள் கழித்து வரலாம்.. 6 மாதங்கள் கழித்து வரலாம்.. ஏன் என்றால், இப்போது நடைபெறும் ஆட்சி என்பது, மெஜாரிட்டியோடு வெற்றி பெறவில்லை. மெஜாரிட்டிக்கு 118 வர வேண்டும். நம்முடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் ஆதரவிலேயே அவர்களது வண்டி ஓடுகிறது. எனவே எப்போது எது நடந்தாலும் நாம் அதற்குத் தயாராக இருக்கனும். எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. எந்தச் சூழ்நிலையிலும் வரலாம். நாம் அதற்கு 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.அவரது உயரத்துக்கு பொருத்தமானது இல்லை
மு.க ஸ்டாலின் பேசியது என்ன?
ஆனால், இப்போது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஒரே மாதத்திற்குள், தமிழ்நாடு இன்றைக்கு அதலபாதாளத்திற்குப் போகும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.எப்போது எது நடந்தாலும்..