இடம் மாறுது சிஎம் விஜய் ஆபிஸ்.. இது தான் அந்த காரணம்! கோவை - மதுரை மெட்ரோ.. கொந்தளித்த சண்முகம்!

  • சென்னை: முதலமைச்சர் அலுவலகத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இதற்கு சில விமர்சனங்கள் எழுந்த நிலையில், முதலமைச்சர் அலுவலகம் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது அரசுக்கு சொந்தமான தலைமைச் செயலகத்தின் 10 மாடி கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என விளக்கம் அளித்துள்ளார் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஈட்டிவீரம்பாளையம் கிராமம் அறிவொளி நகர் பகுதியில் க.ச எண் 544 அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு மற்றும் நிலமற்ற ஏழை விவசாயி, கூலி வேலை செய்பவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து கடந்த 32 வருடங்களாக பயனாளிகளுக்கு வீட்டு மனைகளை அளந்து கொடுக்கப்படாமல் இருப்பதாகவும், இது குறித்து பலமுறை கோரிக்கைவிடுத்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.

    இந்நிலையில், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கு பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் பெண்கள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பெ சண்முகம்

    ஈட்டிவீரம்பாளையம் கூட்டுறவு சங்க சந்திப்பில் இருந்து அறிவொளி நகர் நோக்கி குடியேறும் போராட்டத்திற்கு பேரணியாக புறப்பட்டவர்களை பெருமாநல்லூர் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தடுப்புகளை தள்ளிவிட்டு போராட்டக்காரர்கள் அத்துமீறி கடந்து சென்றனர். அறிவொளி நகர் அருகே போலீசார் அமைத்திருந்த தடுப்பு மற்றும் பேரிகார்டுகளை கடக்க முயற்சித்த போது மீண்டும் போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    வீட்டுமனைப் பட்டா

    இதையடுத்து செய்தியாளர்களிடம் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது,"
    கடந்த 1994-ஆம் ஆண்டு தொடர் போராட்டங்களின் விளைவாக 124 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், நிலத்தை அளந்து அத்து காண்பிக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ளாததால், 32 ஆண்டுகளாக பயனாளிகள் அந்த இடத்தில் குடியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    உயர் நீதிமன்றம்

    இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் நிலத்தை அளந்து ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தும், மாவட்ட நிர்வாகம் அந்த உத்தரவை செயல்படுத்தவில்லை. மேலும், அவிநாசி வட்டாட்சியர் நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தால் பட்டாக்களை ரத்து செய்ய முயற்சிப்பது சட்டவிரோதமானது/ இடத்தைக் காண்பிக்காமல் மக்கள் எப்படி வீடு கட்ட முடியும்.

    Advertisement

    தமிழக அரசு

    மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு அந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். புதிதாக மனு அளித்துள்ள 60 பயனாளிகளுக்கும் உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்கி, நிலத்தை அளந்து ஒப்படைக்கும் வரை குடியேறும் போராட்டம் தொடரும். 1949 முதல் வழங்கப்பட்ட பட்டாக்களில் இன்னும் நிலம் ஒப்படைக்கப்படாத விவரங்கள் குறித்து மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

    காவிரி விவகாரம்

    காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் கர்நாடகா செல்லும் விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பயணம் உறுதி செய்யப்பட்ட பிறகு கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
    கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது கண்டனத்திற்குரியது. போதுமான மக்கள் தொகை இல்லை என்ற காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது. கோவை தொழில்துறை நகரமாக இருப்பதால், மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    Advertisement

    முதலமைச்சர் அலுவலகம்

    நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஒற்றுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. தேர்வு சீர்திருத்தக் குழுவில் அரசு ஆதரவாளர்களை மட்டும் நியமிக்காமல், பேராசிரியர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும். முதலமைச்சர் அலுவலகம் ஏற்கனவே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது அரசுக்கு சொந்தமான தலைமைச் செயலகத்தின் 10 மாடி கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன" என்றார்.

    English Summary

    CPM state secretary Shanmugam says CM Vijay's office shift is part of renovation and slams the Centre over the Coimbatore-Madurai Metro project.