ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: தவெகவினர் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சிபிஎம் சண்முகம்

  • சென்னை: எந்த கட்சியை சார்ந்தவரகளாக இருந்தாலும் பெண்களை பாலியல் ரீதியாக பேசுவது.. பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்குவது.. யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ சண்முகம் கூறியுள்ளார். மேலும், தவெகவினர் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் சொல்லி வருவதாக கூறினார்.

    முதல்வர் விஜய் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலையில் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் பேச்சு இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக அரசியல் தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகமும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

    யாராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும்

    இடதுசாரி கட்சி தலைவர்கள் யாரும் பெண்கள் குறித்து அவதூறாக பேச மாட்டார்கள். பேசினால் நாங்கள் கட்சியிலேயே வைத்து இருக்க மாட்டோம். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். அதில் யாருக்கும் எந்த வித மாற்றுக்கருத்தும் கிடையாது. குறிப்பாக குற்றச்சாட்டுகள் உள்ளது என்றால் அதுகுறித்து பேசுவது என்பது வேறு.. தவறான செய்திகளை சொல்வது.. பொய்யான செய்திகளை சொல்வது போன்றவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.

    எந்த கட்சியை சார்ந்தவரகளாக இருந்தாலும் பெண்களை பாலியல் ரீதியாக பேசுவது.. பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்குவது.. யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தவெகவினர் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள். எடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

    இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது

    ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் துவக்கத்தில் இருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம். ஒவ்வொரு கட்சியும் அவர்கள் கட்சியில் இருக்கிற இத்த்தகைய போக்குகளை ஒழுங்குப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் அவரவர்கள் முன் வர வேண்டும். பொதுவெளியில் அறிவுரை சொல்வது என்பது வேறு. நம்ம கட்சியில் இருந்து யாரும் இப்படி பேசக்கூடாது என்று இடது சாரிகள் சொல்வது போல மற்ற கட்சிகளும் சொல்ல வேண்டும்.

    அது எப்படி வெளிப்படுத்தப்படாலும் கண்டிக்கத்தக்கது. இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எல்லாருமே சொல்லிவிட்டோம். நாடே கண்டித்து கொண்டு இருக்கிறது. அந்த பிரச்சினையில் முறையான புகார் வந்துள்ளது. புகாரின் கீழ் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். சட்டப்படி அவர் எதிர்கொள்ளட்டும். அதே நேரத்தில் நாளை தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது.

    கைது செய்வதால் முடக்கிவிட முடியாது

    இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பங்களிப்பு என்பது அவசியமானது. அதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். புகார்கள் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரை சட்டப்படி எதிர்கொள்ள எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளது. சட்டப்படி அவர் எதிர்கொள்வார். உதயநிதியை கைது செய்வதால் எதிர்க்கட்சிகளை முடக்கிவிட முடியாது.

    அவர் என்ன ஒருவரா இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவர் சட்டப்பேரவையில் இருப்பது முக்கியமானது. நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்" என்று பேசினார்.

    English Summary

    P Shanmugam, CPI(M) State Secretary has stated that legal action must be taken against anyone—regardless of their party affiliation—who makes sexually explicit remarks about women or subjects them to sexual offenses. He further added that they have been calling for action regarding the complaints raised against members of the TVK.