பழனி கோயில் நில பத்திரப்பதிவு மிக பெரிய மோசடிதான்! ஆனால் அமைச்சர் முறைகேடு செய்யவில்லை! சிபிஎம்

  • சென்னை: பழனி கோயில் நிலத்தில் நடந்திருக்கும் பத்திரப்பதிவு மிகப்பெரிய மோசடி என கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

    Advertisement

    சென்னை அம்பத்தூரில் உள்ள கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் சிபிஐ எம்எல் மாநில செயலாளர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Advertisement

    கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், வீரபாண்டியன் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவருடனும் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய அவர்கள், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதனால் ஏற்பட்ட மரணங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விலக வேண்டும். அமைதியான முறையில் டெல்லியில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார்.

    மத்திய அரசு சரியான முறையில் அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் வலுக்கட்டாயமாக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்லி நாடாளுமன்றத்திற்கு முன்னால் நடத்திய காக்ரோச் ஜனதா பார்ட்டி மீது அமித்ஷா தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடியடி நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    Advertisement

    அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு என்பது நடந்துள்ளது. அந்த திருட்டில் சம்பந்தப்பட்ட நபர் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் காணிக்கைத் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெண் எம்பிகளுக்கான எண்ணிக்கையை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து அவைகளின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகு பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கொடுப்போம் என தற்போதைய பாஜக அரசு கூறுவது ஏற்க முடியாது.

    Advertisement

    அதனால் ஏற்கனவே ஏற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். பழனி கோயிலில் உள்ள நிலத்தில் பத்திரப்பதிவுத் துறையில் மோசடி நடைபெற்று இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய மோசடி என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது சிபிசி வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த ஆட்சி அமைந்த பிறகு இந்த அரசு அல்லது இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ இதில் முறைகேடு செய்தார்கள் என்று சொல்ல வரவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு சதி செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி எதுவாக இருந்தாலும் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் வேண்டுமென்பது இடதுசாரிகள் கட்சியின் முடிவு. எனவே தூய்மை பணியாளர்களிடம் உழைப்பு சுரண்டல் செய்யாமல் அவர்களை பணி நிரந்தரம் செய்து உரிய ஊதியம் வழங்க வேண்டும்.

    கொரோனா காலத்தில் ராணுவத்திற்கு இணையாக பணி செய்தவர்கள் தூய்மை பணியாளர்கள் என தெரிவித்தனர்.

    English Summary

    Communist and Marxist party secretaries says that we are not saying that TVK government or minisers has involved in Palani land scam.