Crop Loan: ரூ 50 ஆயிரம் விவசாயக் கடன் தள்ளுபடி! விவசாயிகளின் கடன் சுமையை குறைக்காது! கம்யூனிஸ்ட்

  • சென்னை: விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது, இது தலைமுறை தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் விஜய், விவசாயிகள் சாகுபடி செலவின வகைக்காக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்களில் ரூ.50 ஆயிரம் வரையான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என நேற்று அறிவித்துள்ளார். இது தலைமுறை, தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்" என வழங்கியுள்ள உறுதி மொழிக்கும் மாறானது.

    இதுவரை விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் சாகுபடி நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டதாகவே வழங்கப்பட்டது. இந்த வழிமுறையை மாற்றி "பண மதிப்பை" அடிப்படையாகக் கொண்டு வகுத்துள்ள புதிய முறையும் ஏற்கதக்கதல்ல.

    ஏனெனில், மாவட்டத்துக்கு மாவட்டம், பயிருக்கு பயிர் சாகுபடிச் செலவுகள் மாறுபடும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

    Advertisement

    இதனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, முதல்வரை கேட்டுக் கொள்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

    குறு விவசாயிகள் ரூ 50 ஆயிரம் வரை பெற்ற விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ 50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதி அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான முழுத் தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும் தமிழக அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 1.5.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

    English Summary

    CPI state secretary M. Veerapandian has criticized the crop loan waiver announcement, calling it disappointing for farmers. He stated that the measure would not provide real relief to farming families who have been trapped under generations of debt burden.