சும்மா இருந்த சங்கை..ஊதி கெடுத்த விஜய்! வெடித்த விவசாயிகள் போராட்டம்! பயிர்க் கடனால் பதறும் பனையூர்!

  • சென்னை: தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி விவகாரம் தமிழகம் முழுவதும் விவசாயிகள் இன்று சேர்ந்து போராடும் அளவுக்கு மிகப்பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதியும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி திட்டமும் இடையே வேறுபாடு இருப்பதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் விஜய்க்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக சொல்கின்றனர்.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் பயிர் கடன் தள்ளுபடியும் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.

    Advertisement

    இந்த வாக்குறுதியை நம்பி பல விவசாயிகள் தவெக ஆதரவு அளித்ததாக விவசாய சங்கங்கள் கூறி வருகின்றன. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

    பயிர் கடன் தள்ளுபடி

    முதலில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல மாவட்டங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் பலர், கடன் தொகை ரூ.50 ஆயிரத்தை தாண்டியிருந்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

    Advertisement

    விவசாயிகள் போராட்டம்

    ரூ.60 ஆயிரம், ரூ.70 ஆயிரம் அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றிருந்த விவசாயிகளுக்கு பகுதி அளவிலான சலுகை மட்டுமே கிடைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து அரசு மறுபரிசீலனை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தள்ளுபடி வரம்பு ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், இதுவும் போதுமானதல்ல என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.

    சிறு குறு விவசாயிகள்

    விவசாயிகள் தரப்பில் கூறுவதாவது, சிறு மற்றும் குறு விவசாயிகள் பலர் காலநிலை மாற்றம், மழை குறைபாடு, உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் சந்தை விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் பகுதி அளவிலான தள்ளுபடி பிரச்சனைக்கு முழுமையான தீர்வாக அமையாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    Advertisement

    கூட்டுறவு வங்கி கடன்

    மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடன் தள்ளுபடி

    அரசின் தற்போதைய அறிவிப்பால் ஓரளவு நிவாரணம் கிடைத்தாலும், முழுமையான கடன் சுமை நீங்கவில்லை என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. அதேநேரத்தில், மாநில அரசின் நிதிநிலை மற்றும் செலவின சுமை காரணமாக முழுமையான கடன் தள்ளுபடி அறிவிப்பது எளிதான முடிவு அல்ல என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏற்கனவே அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய பெரிய அளவிலான நிதிச்சுமைகளை ஏற்க அரசு கவனமாக செயல்பட வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    விஜய் அரசு

    இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் அதிகமாக இருப்பதால், இந்த விவகாரம் அரசுக்கு அரசியல் ரீதியாக முக்கிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் விவசாயிகள் மனநிலையை இந்த விவகாரம் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதனால், பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை அரசு மேலும் விரிவுபடுத்துமா, அல்லது புதிய நிவாரண நடவடிக்கைகளை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது.

    English Summary

    Farmers demand complete crop loan waiver, alleging government failed to fulfill election promises.