மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள்.. மனித உரிமை மீறல் இல்லை.. சிஆர்பிஎஃப் சொன்ன அதிர்ச்சி பதில்

  • டெல்லி: நீட் குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது மனித உரிமை மீறல் இல்லை என்று பதில் வந்திருக்கிறது.

    Advertisement

    நீட் முறைகேடுகளுக்கு எதிராக கடந்த மாதம் டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் மிக பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பிரதானமாக வைத்தே இந்த போராட்டம் நடைபெற்றது.

    Advertisement

    பெல்லட் குண்டுகள்

    அப்போது கடந்த ஜூலை 20ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது, போலீசார் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். போராட்டத்தை ஒடுக்க பல இடங்களில் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. சில இடங்களில் பெல்லட் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இதுவே பெரிய சர்ச்சையாக வெடித்தது.

    அதாவது ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இந்தப் பேரணியை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் சார்பில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகிறார்கள்.

    Advertisement

    மனித உரிமை மீறல் இல்லை

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராஜ்யசபா எம்.பி சாகேத் கோகலே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக, ஜூலை 20ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான தகவல்களை அவர் கேட்டிருந்தார். அதற்கு சிஆர்பிஎஃப் இப்போது பதிலளித்துள்ளதாக தெரிகிறது.

    அது குறித்த தகவல்களை சாகேத் கோகலே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதாவது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியது தொடர்பான தகவல்களை வழங்க சிஆர்பிஎஃப் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.. மேலும், இந்த விவகாரம் மனித உரிமை மீறல் தொடர்பான விதிகளுக்குள் இது வராது எனவும் சிஆர்பிஎஃப் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    சிஆர்பிஎஃப்

    சிஆர்பிஎஃப் தனது பதிலில், "விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மனித உரிமை மீறல் தொடர்பான விதிகளில் இல்ல" என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கோகலே கூறினார். இதையடுத்து தான் மேல்முறையீடு செய்தபோதும், அதே காரணத்தை கூறி தகவல்களை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

    சிஆர்பிஎஃப் படைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு இருக்கிறது. அதேநேரம் ஊழல் அல்லது மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரங்கள் என வந்தால் அதற்கு சிஆர்பிஎஃப் பதிலளிக்க வேண்டும் என்பதை கோகலே சுட்டிக்காட்டினார். ஆனால், டெல்லி போராட்டத்தில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது மனித உரிமை மீறல் இல்லை என்று கூறி தகவல் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

    Advertisement

    முரணான தகவல்

    முதலில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும், பின்னர் அது தொடர்பான தகவல்கள் வெளியாகிய நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக தெரிவிக்க மறுத்ததாகவும் கோகலே விமர்சித்தார். மேலும் அவர், "தலைநகர் டெல்லியில் ஆயுதமில்லாமல் போராடிய இளைஞர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை மனித உரிமை மீறலாக கருதவில்லை என சிஆர்பிஎஃப் கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது" என அவர் கூறினார்.

    மேலும், இந்த விவகாரத்தில் சிஆர்பிஎஃப் அளித்துள்ள பதிலை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றத்தின் கருத்தை கோரப்போவதாகவும் சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

    English Summary

    CRPF has reportedly said that the use of pellet guns during the Delhi NEET protest did not fall under human rights violation provisions(டெல்லியில் உச்சத்தில் நீட் போராட்டம்): Delhi NEET Protest latest news in tamil.