”மாப்பிள்ளை” உடன் ஆட்சி நடத்திய ரத்தீஷ்.. இதெல்லாம் மக்களுக்கு சொல்லனுமா இல்லையா? சிடிஆர் அட்டாக்!

  • சென்னை: அதிமுகவில் ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார் எனவும், அரசை முதலமைச்சர், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்தலாம்.. மாப்பிள்ளை உடன் இருக்கும் ரத்தீஷ் போன்ற நபர்கள் தான் நடத்தக்கூடாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி ராஜாவை தமிழக எரிசக்தி துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார்," இன்று நடைபெற உள்ள கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும்.

    சிடிஆர் நிர்மல் குமார்

    திமுக உடனும் அவர்கள் அப்படிதான் தொகுதி உடன்பாடு வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சிக்கு ஆதரவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அது முழு அளவில் இருக்கப் போகிறது மக்களுக்கான அரசாக இருக்கும் இதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த தவறுகளை பழைய நிலைக்கு மாற்றிக் கொண்டு வர எப்படி போராடுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    Advertisement

    திமுக ஆட்சி

    எல்லாத் துறையும் எப்படி உள்ளது எவ்வளவு மோசமாக உள்ளது என்று சொல்லி தான் ஆக வேண்டும். எவ்வளவு தூரம் மக்களை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள். மூன்று தலைமுறை, 70 ஆண்டு கட்சி எல்லாம் சரிதான். மக்களுக்கு என்ன செய்தீர்கள்? எதைச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளீர்கள் என்று மக்களுக்கு இன்று உள்ள தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இதிலிருந்து என்ன மீட்டு கொண்டு வருகிறோம் என்று தெரிய வேண்டும்.

    காவிரி விவகாரம்

    எவ்வளவு தூரம் அரசு துறையை கெடுத்து வைத்து இருக்கிறார்கள். எதிலிருந்து மீட்கிறோம் என்று தெரிய வேண்டும். காவிரியில் என்ன செய்தீர்கள் என்று தெரிந்தால் தான் எப்படி மீட்கிறார்கள் என்று தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் என்ன தவறவிட்டார்கள் தவறு செய்தார்கள் என்று சொல்லித்தான் ஆகவேண்டும். சர்க்காரியா கமிஷன் அமைக்கிறோம் என்று மிரட்டுவோம்.

    Advertisement

    கச்சத்தீவு

    கேவல் சிங்கை வைத்து சிபிஐ வழக்கு தொடுப்போம் என்று சொன்ன பிறகுதான் கச்சத் தீவை தாரை வார்த்தீர்கள். நீங்கள் செய்த தவறு தான் சொல்லித்தான் ஆக வேண்டும். 76 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை வரும் பொழுது விரட்டப்பட்டதன் கச்சத்தீவு தொடர்பாக வெளியிடவில்லை. கலைஞருக்கு இது தொடர்பாக முன்பே தெரியும். இதை தடுத்து இருந்தால் 50 ஆண்டுகள் மீனவர்கள் கஷ்டப்பட்டு இருக்க வேண்டிய தேவையில்லை.

    ரத்தீஷ்

    ரத்தீஷ் என்பவர் குறித்து முதல் தகவல் அறிக்கை போட்ட உடன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடைமுறையை தெளிவாக காவல்துறை தெளிவாக செய்து வருகிறது. எதற்காக ரத்தீஷ் பெயரை முதலமைச்சர் பதிவு செய்தார் என்றால் அரசை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் நடத்தலாம் ரத்தீஷ் என்ற தனிப்பட்ட நபரோ மாப்பிள்ளை உடன் இருக்கும் நண்பர்களோ நடத்தக்கூடாது. அரசை ரத்தீஷ் என்பவர் நடத்துவது அதிகாரிகள் அவரை பார்ப்பது 10 பேர் அமர்ந்து கொண்டு குறைகளை பிரித்துக் கொண்டு வசூல் செய்வது.

    Advertisement

    மாப்பிள்ளை

    ரதீஷ் என்பவருக்கு அரசியலும் தெரியாது மக்களைப் பற்றியும் தெரியாது. மாப்பிள்ளை உடன் இருக்கும் 10 பேரும் மகனுடன் இருக்கும் 10 பேரும் அரசை நடத்தி உள்ளார்கள். எதுவும் தெரியாமல் டாஸ்மாக்கில் வசூல் மட்டும் செய்து கொண்டுள்ள ரத்தீஷ் போன்ற பவர் புரோக்கர்களை வைத்து அரசை நடத்தி உள்ளார்கள் இதை மக்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது. இதிலிருந்து மாற்ற வேண்டி உள்ளது. புரையோடி உள்ள சிஸ்டங்களை மாற்றுகிறோம் என்று மக்களுக்கு தெரிய வேண்டும்" என்றார்.

    English Summary

    Minister CTR Nirmal Kumar accused Ratheesh and others of influencing government affairs, calling them power brokers who must be removed.