சென்னை: "போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ்நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு போனதே திமுக தான். திமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டிற்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வந்தது." என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், "வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இரண்டரை மாதத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒருசில விதிகளை சேர்க்க உள்ளோம். பொதுமக்களின் தகவல்கள் மின்வாரியத்திடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். E-Sim Card இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
சென்னையில் சுமார் 600 முதல் 1,000 மின் மாற்றிகளை புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள், சற்று உயரமான இடங்களில் பொருத்தப்படும். ஒப்பந்த அடிப்படையில் இருப்பவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரியவில்லை. ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் சம்பளம் தரவில்லை. அதனால்தான் புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் 400KV துணைமின் நிலையம் ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு வரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் புதிதாக 5,000 மின் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். புது வண்ணாரப்பேட்டையில் 3 நாட்களுக்கு மின்வெட்டு என்பது தவறான தகவல். வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தயார். பொதுமக்கள் மின்சாரப் புகார்களுக்கு 94987 94987 என்ற 24 மணி நேர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். போதைப் பொருள் விவகாரத்தில் தமிழ்நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு போனதே திமுக தான். திமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டிற்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வந்தது. திமுக ஆட்சியில அவர்கள்தான் Methamphetamine Supply செய்தது. Synthetic Drugs பரவியது கடந்த 5 ஆண்டுகளில் தான். போதைப்பொருள் நெட்வொர்க் தமிழ்நாட்டில் ஊடுருவியதே கடந்த 5 ஆண்டுகளில் தான். இதை கட்டுப்படுத்துவதுதான் முதல்வரின் ஒரே குறிக்கோள். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.“கட்சியா இல்லை Narcos கூடாரமா? போதைப்பொருள் கடத்தும் தவெகவினரை கட்டுப்படுத்துங்க” - உதயநிதி ஸ்டாலின்