தவெகவில் இணையும் சிவி சண்முகம்? மாநிலப் பொறுப்பு கேட்டு டிமாண்ட்.. தயக்கம் காட்டும் தவெக தலைமை!

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தவெக பக்கம் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிவி சண்முகத்தை இணைக்க தவெக தலைமை ஒப்புதல் தெரிவித்துவிட்டாலும், அவரின் டிமாண்ட் இணைப்பை தாமதமாக்கி இருக்கிறது. ஏனென்றால் தவெகவில் மாநில அளவிலான பதவியை சிவி சண்முகம் எதிர்பார்க்கிறார். இதனால் தவெக தரப்பு என்ன முடிவு எடுப்பது என்று ஆலோசனையை தொடங்கியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த பின், அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பலரையும் அதிர்ச்சியாக்கியது. இவர்கள் பலரும் விஜய்க்கு பின் அணி திரள்வது தவெகவுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் 90% அதிமுகவினர் தவெகவில் இணைய வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மண்டலத்திலும் தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்த தவெக தலைமை தீவிரமாக உள்ளது. இதனால் வட மாவட்டங்களில் தவெகவை பலப்படுத்த தவெக தரப்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துடன் பேசி வருகிறது.

    இதன் காரணமாகவே சிவி சண்முகம், நான் அதிமுகவில் இருக்கிறேனா, இல்லையா என்று எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும் என்று பேசி இருக்கிறார். முதற்கட்டமாக தவெகவில் இணைய ஆர்வம் காட்டினாலும், தவெக ஆட்சி அமைத்த பின் அதிமுகவில் இருக்கும் மனநிலையில் தான் இருந்தார். ஆனால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்களின் கட்சிப் பதவியை மீண்டும் எடப்பாடி பழனிசாமி அளிக்கவில்லை.

    Advertisement

    இதனால் சிவி சண்முகம் இனி அதிமுகவில் இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதனால் தவெகவில் இணைய சிவி சண்முகம் தரப்பு தயாராகி வருகிறது. சிவி சண்முகம் மட்டுமல்லாமல், சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ், திருத்தணி எம்எல்ஏ ஹரி, புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித் தேவன் ஆகியோரும் தவெக பக்கம் சாய தயாராகிவிட்டார்கள்.

    இதில் சிவி சண்முகம் மட்டும் தவெகவில் மாநில அளவிலான பொறுப்பை கேட்டு டிமாண்ட் வைத்துள்ளார். இதனிடையே இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் விதித்த தடை, ஆளுநரிடம் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கொடுத்த குதிரை பேர புகார் ஆகியவற்றால் தவெக தலைமை நிதானமாக செயல்பட முடிவு செய்துள்ளது.

    Advertisement

    ஆனால் 2 மாதங்களில் இந்த இணைப்பு விழா சாத்தியமாக கூடும் என்று இரு தரப்பிலும் சொல்கின்றனர். சிவி சண்முகம் தவெக பக்கம் செல்லும் பட்சத்தில் விழுப்புரம் தவெக கூடுதல் பலம் பெறும். அதேபோல் அதிமுகவின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் உடையத் தொடங்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

    English Summary

    CV Shanmugam: AIADMK Former minister CV Shanmugam Entry to TVK Delayed Due to Demand for State-Level Role