எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது?

  • சென்னை: கடந்த சில நாட்களாக ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அப்படியே தவெகவில் சேர்ந்தபடி இருக்கிறார்கள். எடப்பாடி நியமித்த கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் 25 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், ''தகுதி நீக்கம் செய்வது தான் சரியாக இருக்கும் ; உங்களுக்கான பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அவர்கள் உதவினார்கள் என்பதற்காக, சட்டச்சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

    Advertisement

    நீதிமன்றத்துக்கு எடப்பாடி தரப்பு செல்லுமேயானால் இந்த சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆட்சி அமைத்த 15, 20 நாளிலேயே உங்கள் ஆட்சிக்கு எதிராக அதாவது சபாநாயகருக்கு எதிராக கட்சித்தாவல் வழக்கு கோர்ட் படி ஏறினால் மக்களிடம் உங்கள் இமேஜ் சரிய வாய்ப்பு உண்டு '' என்று சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர்கள் முதல்வர் விஜய்க்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். அதனடிப்படையில், ''கட்சித்தாவல் தடைச் சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள்'' என்று சபாநாயகருக்கு ஜோசப் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

    Advertisement

    இதனை அறிந்ததால் தான், ஆதவ்வின் ஆலோசனையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததோடு தவெகவில் சிலர் இணைந்தனர். சிலர், எடப்பாடியிடமே சரணடைந்துள்ளனர். தகுது நீக்கம் செய்யுங்கள் என்று எடப்பாடி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள், நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எடப்பாடியின் கொறடா மீண்டும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து விட்டால் தகுதி நீக்கத்தை நிறுத்தி வைக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.

    அந்த வகையில் அந்த கெடு நாளையுடன் முடிவதால்தான் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடியை சந்தித்து வருகிறார்கள். இவர்களை அரவணைத்தாலும், மன்னிப்பு கடிதம் எழுதி தரச் சொல்லி வலியுறுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் தமது இமேஜ் என்னவாவது? என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள் சரணடைந்தவர்களும், சரணடைய விருப்பப்படுபவர்களும்.

    Advertisement

    இதனால், எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டதற்காக மன்னிப்புக் கடிதம் என்கிற கடுமையை அவர் காட்டவேண்டுமா? இப்படி கடுமை காட்டி விட்டு தங்களுடன் எப்படி சகஜமாக இணைந்து அரசியல் செய்வார்கள் என யோசிக்க மாட்டாரா? என்று எடப்பாடி மீது வெளியே சொல்ல முடியாத அளவுக்கு புழுங்கிக்கொண்டிருக்கிறார்களாம்.

    அமைச்சர் பதவி, வாரியப்பதவி என தவெக காட்டிய ஆசையில் மயங்கியிருக்கக் கூடாது என இப்போது வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களும் மாசெக்களும் என்கிறார்கள்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    CV Shanmugam and SP Velumani does not want to send apology letter to Edappadi Palanisamy of AIADMK