செல்லாக்காசு ஆன எடப்பாடி! முடிஞ்சா எங்களை கூப்பிட்டு மீட்டிங் போடுங்க! சவால் விட்ட சிவி சண்முகம்!

  • சென்னை: அதிமுகவில் சிவி சண்முகம் எடப்பாடி தரப்பு இடையே மோதல் அதில் வரும் நிலையில் சசிகலாவை சேர்க்க வேண்டுமென நேற்று அறிக்கை வெளியிட்டது அதிருப்தி தரப்பு. இந்த நிலையில் அமைச்சராக முடியவில்லை என்ற வயிற்றெரிச்சலில் வேலுமணி தரப்பு பேசுவதாக குற்றம் சாட்டியிருந்தார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி செல்லாக்காசு ஆகிவிட்டாரா? என மீண்டும் விமர்சித்திருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    Advertisement

    இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியே தோல்விக்கு காரணம் என கைகாட்டி விட்டு பலரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு என முக்கிய முகங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர்.

    அதிமுக அதிருப்தி

    இந்த நிலையில் அதிமுகவில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு நிலைப்பாட்டில் முக்கிய தலைவர்கள் இருக்கின்றனர். அவர்களில் எஸ் பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தர்மபுரி அன்பழகன் என பலரை குறிப்பிடலாம். இதற்கிடையே அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிருப்தி கோஷ்டி முழக்கம் எழுப்ப தொடங்கியுள்ளது.

    Advertisement

    சசிகலா

    இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம் எழுதியது வேலுமணி அண்ட் கோ. இந்த நிலையில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற வயிற்று எரிச்சலில் வேலுமணி தரப்பு பேசுவதாகவும் எடப்பாடியின் செல்வாக்கால் தான் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வென்றது என பேசி இருந்தார் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீதான விமர்சனத்தை மீண்டும் எழுப்பி இருக்கிறார் சிவி சண்முகம்.

    சிவி சண்முகம்

    இன்று நத்தம் விஸ்வநாதன், தர்மபுரி அன்பழகன், சிவி சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிவி சண்முகம்," எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கால் தான் 49 தொகுதிகளில் அதிமுக வென்றது என பேசி இருக்கிறார்கள். அப்படி என்றால் மீதமுள்ள 190 தொகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி செல்லாக்காசு ஆகிவிட்டாரா? நத்தம் விஸ்வநாதனின் பொறுப்பு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வென்றிருக்கிறது.

    Advertisement

    எடப்பாடி பழனிச்சாமி

    விழுப்புரத்தில் மூன்று தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்றது. தர்மபுரியில் நான்கு தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. ஆனால் சேலத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. எடப்பாடியின் சொந்த வார்டில் கூட அதிமுகவுக்கு குறைவான வாக்குகள் தான் கிடைத்தது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்து ஒரு தேர்தலில் கூட வெல்லவில்லை.

    வேண்டப்பட்ட ஆட்கள்

    தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய வேண்டும் என கூட்டம் கூட்டினால் மாவட்ட செயலாளர்களை குறை சொல்லுகிறார் எடப்பாடி. தமிழ்நாடு முழுவதும் வென்றால் அவர் செல்வாக்கு, மாவட்டங்களில் தோற்றால் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு என்கிறார். முன்னாள் அமைச்சர்கள், வேட்பாளர்களை அழைக்காமல் வேண்டப்பட்ட ஆட்களை மட்டும் அழைத்து தேர்தல் தோல்வி குறித்து இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

    Advertisement

    அதிமுக - திமுக கூட்டணி

    தைரியம் இருந்தால் எங்களை அழைத்து கூட்டத்தை கூட்ட முடியுமா? அதிமுக - திமுக கூட்டணி என நாங்கள் பேசியபோது இல்லை என்றார்கள். ஆனால் திமுகவினர் நாங்கள் பங்காளிகள் என்று சொல்கிறார்கள். எந்த காலத்தில் நாங்கள் பங்காளிகளாக இருந்தோம். பதவிக்காக எடப்பாடி எதையும் செய்ய தயாராகி விட்டார். அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

    English Summary

    AIADMK leader CV Shanmugam questions Edappadi Palaniswami’s leadership and challenges him to hold a meeting with dissenting leaders.