சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!

  • சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை. கடந்த சில வாரங்களாக இருந்த வந்த இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வருகிறதாம். எடப்பாடியிடம் சண்முகம் அணி சரண்டராகிவிட்டது. இரு அணிகளும் சில டிமாண்ட்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது. எடப்பாடி பழனிசாமி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தனி அணியாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று சண்முகம் அணி கோரிக்கை வைத்தது.

    Advertisement

    எடப்பாடியிடம் சரண்டர்

    தவெக அரசு மீது சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தவெக அமைச்சரவையில் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்தான் வேலுமணி அணியினர் அவ்வாறு செயல்பட்டதாக எடப்பாடி தரப்பு குற்றம் சாட்டியது.

    தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சண்முகம், வேலுமணி அணியினருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சி.வி சண்முகம், வேலுமணி அணி அதிர்ச்சியடைந்தது. ஏற்கனவே அவர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார். இதனால் நிற்கதியாக உள்ளனர். வேறு வழியில்லாததால் மீண்டும் எடப்பாடியிடம் சரண்டராகியுள்ளனர்.

    Advertisement

    சண்முகம் அணி சமரசம்

    ஆனால் வேலுமணி, சண்முகம் அணியை அதிமுகவில் இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி சில டிமாண்ட்களை வைக்கிறாராம். தேர்தல் ஆணையத்தில் கொடுத்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையாக தான் அந்த மனு கொடுக்கப்பட்டதாக எடப்பாடி கருதுகிறாராம்.

    தேர்தல் ஆணைய புகாரை திரும்பி வாங்க வேண்டுமென்றால் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து கட்சி பதவிகளையும் திரும்ப கொடுக்க வேண்டும் என்று வேலுமணி அண்ட் கோ டிமாண்ட் வைத்துள்ளனர். இரண்டு அணியினரும் சபாநாயகரிடம் வாங்கிய மனுக்களை திரும்பிப் பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    விரைவில் இணைப்பு

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறவுள்ளனர். பொதுக்குழு கூட்டுவதை பற்றி இனி மூச்சே விடக்கூடாது என்று எடப்பாடி கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம். இதையொட்டி இரண்டு அணிகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் இரண்டு அணியினரும் ஒன்றாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    CV Shanmugam, SP Velumani team surrendred with Edappadi Palanisamy. ADMK merger likely to happen soon. Both team talking with some conditions.