சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி!

  • சென்னை: சிவி சண்முகமும், நாங்களும் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்று எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து கருத்து வேறுபாடு மட்டும்தான் என்று கூறிய எஸ்பி வேலுமணி, தோல்வியை ஆராய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்வதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதிமுகவில் நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவில் இருந்த 25 எம்எல்ஏ எஸ்பி வேலுமணி தலைமையில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலமாக அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

    Advertisement

    இதனால் எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு கடிதம் அளித்தது.
    தவெக மீதும் குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இடையில் மோதல் நிலவி வந்தது.

    இதனிடையே அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். அதேபோல் விஜய் தலைமையில் அமைச்சரவையும் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டது. இதனால் எஸ்பி வேலுமணி தரப்பு அதிர்ச்சி அடைந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கினர். இதன்பின் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சுமூக பேச்சுவார்த்தை தொடங்கியது.

    Advertisement

    இன்று எஸ்பி வேலுமணி, அன்பழகன், விஜயபாஸ்கர், காமராஜ், லீமா ரோஸ் உள்ளிட்ட அனைவரும் எடப்பாடி பழனிசாமியை அவரின் வீட்டில் சந்தித்து சமூக உடன்பாட்டை எட்டினர். ஆனால் சிவி சண்முகம் மட்டும் வரவில்லை. தொடர்ந்து சபாநாயகர் முன் சென்ற அதிமுகவினர் ஒருங்கிணைந்து அதிமுகவின் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்க கடிதம் அளித்தனர்.

    இதன்பின் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனுக்களை திரும்ப பெற்றுள்ளோம். அதிமுகவில் பிளவு ஏற்படவில்லை. கருத்து வேறுபாடு மட்டுமே இருந்தது. அதுவும் முடிவுக்கு வந்துவிட்டது. அதிமுகவில் நீடித்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கிவிட்டன.

    Advertisement

    எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவி சண்முகத்தின் அலுவலகத்தில் இருந்துதான் நாங்கள் வந்தோம். எல்லோரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். எந்தப் பிரச்சனையும் இல்லை. அதிமுக ஒன்றுகூடிவிட்டது. சிவி சண்முகம் எங்களோடு தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    CV Shanmugham: AIADMK former minister SP Velumani has stated that C.V. Shanmugam and AIADMK remain united