மாணவர்களுக்கு வழங்கப்படும் நவீன சைக்கிள்.. எப்படி இருக்கும் தெரியுமா? மாடல் புகைப்படத்தை பாருங்க!

  • சென்னை: தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் நவீன சைக்கிள் எப்படி இருக்கும் என்ற மாடல் புகைப்படம் வெளி வந்துள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவிகள் இருவருக்கும் சேர்த்து மொத்தமாக 5,32,388 சைக்கிள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் தனது மாடல் சைக்கிளை காட்டி இருக்கின்றனர். இதன் இறுதி வடிவத்தை தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

    Advertisement

    தமிழக பட்ஜெட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்ளுக்கு ரூ.277 மதிப்பில் நவீன சைக்கிள், வாட்டர் பாட்டில், தலைக்கவசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை திமுகவும் தொடர்ந்து வந்தது. தற்போது தவெக அதனை நவீன சைக்கிளாக மாற்றி அறிவித்தது.

    Advertisement

    இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நவீன சைக்கில் கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு நேற்று முன் தினம் டெண்டர் கோரியது. மொத்தமாக மாணவர்களுக்கு 2,37,133 சைக்கிள் உடன் தலைகவசம், தண்ணீர் பாட்டில் வழங்கவும், மாணவிகளுக்கு 2,95,255 நவீன சைக்கிளும், தலைவசகம் மற்றும் தண்ணீர் பாட்டில் என்று 5,32,388 நவீன சைக்கிள், தலைகவசம், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான டெண்டரில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல் டெண்டர் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கே மாதிரி சைக்கிளை எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு நிறுவனங்கள் மாதிரி சைக்கிளை சமர்ப்பித்ததாக தெரிகிறது.

    Advertisement

    அதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களின் மாதிரி சைக்கிள்களை பார்த்துள்ள தமிழக அரசு அதிகாரிகள், இறுதி மாடலை தேர்வு செய்துவிட்டதாக தெரிகிறது. தற்போது டிரெண்டில் இருக்கும் சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க அதிகாரிகள் முடிவு செய்து, அதன் மாதிரி புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர்.

    அது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த டெண்டர் அறிவிக்கப்பட்ட பின், அடுத்த 150 நாட்களுக்குள் சைக்கிள்களை அந்த நிறுவனம் தமிழக அரசிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன்பின் சைக்கிள் விநியோகம் அமைச்சர்கள் அல்லது அந்தந்த எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Modern Cycle: Tamil Nadu Government Finalizes Modern Bicycle Design for Over 5.3 Lakh Class 11 Students