அர்ணாப் புயல்.. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த பதில்

  • சென்னை:ஆந்திராவிற்கு அருகில் உள்ள வட மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் தெற்கில் புதுக்கோட்டை - சிவகங்கை பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை மற்றும் கடலில் புயல் வீச வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதால் இன்று தமிழ்நாட்டில் மழை குறைகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறுகையில், "சென்னை, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், சேலம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர் போன்ற வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை (15-64 மி.மீ) பதிவாகியுள்ளது. மற்ற வட மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது.

    Advertisement

    இன்றைய வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் இயல்பான அளவே இருந்தது - திருச்சி, கரூர், விருதுநகர், பாளையங்கோட்டை மண்டலத்தில் 37 - 37.5°C வரை பதிவாகி இருக்கலாம். மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் வெப்ப அலை வீசாது.

    இன்றைய மழைக்கணிப்பு

    மாநிலம் முழுவதும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் பரவலாகப் பெய்து வந்த மழை வெகுவாகக் குறைகிறது. பெரும்பாலான உள் மாவட்டங்களில் வறண்ட நாளாகவே இருக்கும்.

    ஆந்திராவிற்கு அருகில் உள்ள வட மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் தெற்கில் புதுக்கோட்டை - சிவகங்கை பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை மற்றும் கடலில் புயல் வீச வாய்ப்புள்ளது. ஒடிசா அருகேயுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்குத் திசைக் காற்றை ஈர்ப்பதால், கன்னியாகுமரி, மாஞ்சோலை பகுதியிலுள்ள நெல்லை மலைப்பகுதிகள், பெரியார் நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் வால்பாறை ஆகிய மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடுமையான வானிலை எச்சரிக்கை: எதுவுமில்லை" இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

    Advertisement

    வானிலை மையம்

    இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் செப்டம்பர்23, 24 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி. ஆர்.துரை வெளியிட்ட அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் பூங்குணத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    Advertisement

    மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பர்21) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அன்றைய தினம் மாலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டது.

    இது செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்து, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளை செப்டம்பர்24-ம் தேதி காலையில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையில் கரையை கடக்கக்கூடும்.

    Advertisement

    இதுதவிர, சுமார் 3.1 முதல் 7.6 கி.மீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி வரை, கர்நாடகா மற்றும் கடலோர ஆந்திரா வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

    இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர்22) மிதமான மழை பெய்யக்கூடும்.

    செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.செப்டம்பர்23-ம் தேதி ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக் கடல், வடதமிழக கடலோரப் பகுதி, கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 24-ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும்.

    இதுதவிர, மத்திய வங்கக்கடல் பகுதி, அதனை ஒட்டிய வடக்கு மற்றும் தெற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா கடலோர பகுதி, தெற்கு ஆந்திர - மேற்கு வங்க கடலோர பகுதிகளில் செப்டம்பர்26-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி தேதிகள் வரை செல்ல வேண்டாம்" இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.

    English Summary

    Light rain is likely in scattered areas across the northern districts bordering Andhra Pradesh—namely Tiruvallur, Chennai, and Ranipet—as well as in the southern regions of Pudukkottai and Sivaganga; there is also a possibility of stormy conditions at sea. Tamil Nadu Weatherman Pradeep John has stated that rainfall in Tamil Nadu will decrease today due to the formation of a depression.