உக்கிரம் காட்டும் முரசு புயல்.. முதல்வர் விஜய்க்கு போன் போட்டு உதவி கேட்ட சந்திரபாபு நாயுடு

  • சென்னை: முரசு புயல் இன்று ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புயலின் தாக்கம் காரணமாக அங்கு பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து, மீட்பு பணிகளுக்காக மின் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை அனுப்பி வைக்குமாறு தமிழக முதல்வர் விஜய்யிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    ஆந்திராவில் இன்று நள்ளிரவு முரசு புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை கணித்துள்ளது. புயல் கரையைக் கடப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய்யை தொடர்பு கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புயல் பாதிப்பு தொடர்பாக உதவி கோரியுள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக ஆந்திர முதல்வர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- புயல் தாக்கத்திற்கு மத்தியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் விஜய்யை தொடர்பு கொண்டு தொலைபேசி வாயிலாக பேசினார். முரசு புயலின் தாக்கத்தால் அதிக அளவில் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.

    எனவே அவற்றை சீர் செய்து மின் இணைப்பை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வர பணியாளர்கள் மற்றும் தேவையான உபகரணங்களை கொடுத்து உதவுமாறு விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் விஜய்யும் இதற்கு சாதகமான பதிலை அளித்துள்ளார்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    Advertisement
    Cyclone Murasu: மிரட்டும் ’முரசு’ புயல்? பொதுமக்கள் செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதாவை என்னென்ன? TNDRRA அட்வைஸ்

    முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளான நெல்லூர் - நரசபூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தை சூறைக்காற்று எட்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    Advertisement

    புயல் காரணமாக ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட முழு வீச்சில் தயராக இருக்குமாறு சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சந்திர பாபு நாயுடு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    Where is Murasu Now?: முரசு எங்கே?புயல் நகர்ந்தாலும் சென்னைக்கு மழை வாய்ப்பு எப்படி? வெதர்மேன்!

    ஆந்திராவை நோக்கி மற்றொரு புயல் நெருங்கி வருகிறது. நவம்பர் 3 ஆம் தேதி காலையில் பாபட்லா அருகே தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்னாப் புயலின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த புயல் ஆந்திராவை நெருங்கி வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    English Summary

    Chandrababu Naidu: The India Meteorological Department has predicted that Cyclone Murasu will make landfall in Andhra Pradesh today. Due to the impact of the cyclone, electricity poles have been damaged in several locations. In light of this, Chandrababu Naidu has requested Tamil Nadu Chief Minister Vijay to send electrical workers and equipment to assist with relief operations.