சென்னை: முரசு புயல் வடக்கு ஆந்திரா பகுதியை நெருங்கி வருகிறது. இதனால் சென்னையில் கடல் சீற்றம் அதிகரிக்கும் என கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.4மீ முதல் 2.1மீ வரை உயரமாக எழும்பும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
முரசு, அதிதீவிர புயலாக உருவாகியிருக்கிறது. புயல் காரணமாக சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 21 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 11 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. முக்கியமான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடல் சீற்றம் காரணமாக, மெரினா கடற்கரைக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மட்டுமல்லாது திருவள்ளூரின் பழவேற்காடு கடற்கரைக்கும் மக்கள் போக வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.