Cyclone Murasu: அதி தீவிர புயலாக கரையக் கடந்த முரசு புயல்.. 120 கிமீ வேகத்தில் வீசிய காற்று.. ஆந்திராவில் பலத்த மழை

  • சென்னை: வங்கக் கடலில் உருவான முரசு புயல் அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ஆந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது 120 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் கொட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.

    Advertisement

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது கடந்த 31 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), நவம்பர் 1 ஆம் தேதி முரசு புயலாகவும் வலுப்பெற்றது. இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் தீவிர புயலாக மாறியது.

    Advertisement

    தொடர்ந்து இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே ஓங்கோல் அருகே நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலைக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் முரசு புயலின் முன்பகுதி கரையை கடக்க ஆரம்பித்தது.

    School Leave: முரசு புயலால் கொட்டும் கனமழை.. கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம்

    இதனால் 90 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. முதலில் இந்த புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதி தீவிர புயலாகவே கரையை கடக்க ஆரம்பித்தது. இன்று அதிகாலையில் முரசு புயலானது அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கனமழையும் கொட்டியது.

    Advertisement

    சுமார் 120 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. அதிகாலை 4 மணியளவில் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று தாமதமாக காலை 6 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா மட்டுமின்றி வடதமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    English Summary

    Cyclone 'Murasu', which formed in the Bay of Bengal, crossed the coast as a very severe cyclonic storm. It made landfall between Nellore and Narasapur in Andhra Pradesh, to the south of Ongole. At the time of landfall, strong winds blew at a speed of 120 kmph, accompanied by heavy rainfall. Heavy rain also occurred in some places across the northern and northern coastal districts of Tamil Nadu.