சென்னை: தேனிலவுக்காக சென்ற புதுமண தம்பதிக்கு இப்படியொரு ஷாக் நடக்கும் என்று அவர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். உணவு சமைத்து சாப்பிடலாம் என்று நெருப்புக்கு அருகே உட்கார்ந்திருந்த பெண், அடுத்த சில நொடிகளில் அதே நெருப்பில் சிக்கி, இன்று உயிருக்கு போராடி வருகிறார்.. ஆனால், இந்த சம்பவத்தில் அதைவிட பதற வைக்கும் இன்னொரு விஷயமும் இருக்கிறது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சவுவிக் தாஸ் - நிகிதா தம்பதி தேனிலவுக்காக டார்ஜிலிங்கின் சிட்டாங் மலைப்பகுதிக்கு சென்றிருக்கிறார்கள்.. திருமணம் முடிந்து சில காலமே ஆன நிலையில், இருவரும் மலைப்பகுதியில் தங்கி இயற்கை அழகை ரசித்து நேரத்தை செலவிட சென்றனர்.
செப்டம்பர் 13-ம் தேதி இரவு அவர்கள் தங்கியிருந்த சொகுசு லாட்ஜில், உணவு சமைக்கும் வசதி குறித்து கேட்டுள்ளனர். அப்போசூ பார்பிக்யூ(Barbeque) செய்து கொடுக்கும் வசதி இருந்தது தெரியவந்துள்ளது.. உடனே தம்பதி இருவரும் பார்பிக்யூ தயார் செய்யும் இடத்திற்கு இரவு சுமார் 8.20 முதல் 8.30 மணியளவில் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் முன்னாலேயே அடுப்பில் ஊழியர் ஒருவர் பார்பிக்யூ தயார் செய்து கொண்டிருந்தார்.. அந்த அடுப்பிற்கு பக்கத்திலேயே தம்பதி இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டனர்.. ஊழியர் அந்த அடுப்பை எரியூட்டுவதற்காக பிளாஸ்டிக் கேனில் இருந்து ஒரு திரவத்தை ஊற்றியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அடுப்பில் இருந்து தீ கொளுந்து விட்டு எரிந்தது.. கேனில் வைக்கப்பட்டிருந்த திரவத்தை நெருப்பில் ஊற்றியதுமே, அந்த திரவம் குப்பென பற்றிக்கொண்டு எரிய துவங்கியது.. இந்த நெருப்பு அருகில் அமர்ந்திருந்த புதுமணப்பெண் நிகிதா மீதும் பாய்ந்தது.. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகிதாவின் உடம்பெல்லாம் தீப்பற்றிக் கொண்டது.. நிகிதா அலறியடித்து கீழே விழவும், இதைப் பார்த்ததும் பதறிய கணவர் சவுவிக்,ஓடிச்சென்று மனைவியை காப்பாற்ற முயன்றார்.. அதேபோல அங்கே சமைத்துக் கொண்டிருந்த ஊழியரும் மேலாடையை கழற்றி நிகிதாவின் உடலில் பற்றியிருந்த தீயை அணைக்கவும் முயன்றார்.. இதில், சவுவிக்கின் கையிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக நிகிதாவை நெருப்பிலிருந்து காப்பாற்றி, அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.. போராடிய நிகிதாவுக்கு சுமார் 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.. முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உடல்நிலை மோசமானதால் சிலிகுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நிகிதாவை மாற்றம் செய்துள்ளார்கள்.. அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். உடனடியாக உடலின் பல பகுதிகளிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, நிகிதாவுக்கு உடனடி உதவி கிடைக்கவில்லை என்று கணவர் சவுவிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.. "என் மனைவி நிகிதா தீக்காயங்களுடன் பால்கனியிலேயே அலறித் துடித்தார். ஆனால், ஹோம்பேக் நிர்வாகமும் அங்கு இருந்த ஊழியர்களும் உடனடியாக உதவ முன்வரவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்" என்று வேதனையுடன் கூறுகிறார். தீயில் சிக்கிய நிகிதாவுக்குச் சரியான நேரத்தில் உதவி கிடைக்காதது குறித்து, போலீசிலும் புகார் அளித்துள்ளார். இதனால், தீ எவ்வாறு பரவியது மற்றும் விபத்து நடந்த நேரத்தில் அங்கு இருந்தவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர். அப்போது லாட்ஜ் மேனேஜர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.. தீ விபத்துக்குப் பிறகு ஆரம்ப உதவிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், சுமார் 20 நிமிடங்களில் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நிகிதாவை விரைவாக சிலிகுரிக்கு அழைத்துச் செல்லவே முயன்றதாகவும், ஆனால் லாட்ஜில் இருந்து சிலிகுரி செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது" போலீசாரிடம் விளக்கம் தந்துள்ளார். எனினும் இந்த 2 தரப்பு வாதங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அந்த சொகுசு விடுதியில் தீயை அணைப்பதற்கான உபகரணங்கள் எதுவும் தயார் நிலையில் இல்லை என்றும் கூறப்படுகிறது... சுமார் ஒரு மணி நேரமாக அங்கேயே காத்திருந்த பிறகு, அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை கிட்டத்தட்ட 3 மணி நேரம் பயணம் செய்து சிலிகுரி செல்லும் வரை நிகிதா தீக்காயங்களால் ஏற்பட்ட வலியால் துடித்துக் கொண்டே இருந்தாராம். இதையடுத்து, தீ விபத்து எப்படி நடந்தது? நெருப்பில் ஊற்றப்பட்ட திரவம் என்ன? அதை யார் பயன்படுத்தினார்? அந்த திரவம் எதற்காக நெருப்பில் ஊற்றப்பட்டது? அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தனவா? தீப்பற்றிய பிறகு மருத்துவ உதவி வழங்குவதில் உண்மையிலேயே தாமதம் ஏற்பட்டதா? இந்த கேள்விகளுக்கான பதில்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட லாட்ஜ், கடந்த ஜூன் மாதத்தில்தான் திறக்கப்பட்டதாம்.. இப்போதுகூட கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பததாக கூறுகிறார்கள்.டார்ஜிலிங் தம்பதி
ஹனிமூன் - நெருப்பு
நிகிதா சீரியஸ்
லாட்ஜ் மேனேஜர்
போலீஸ் விசாரணை