மகளுக்கு பிண்ட தானம் செய்த தந்தை.. அதுவும் மரத்தடியில்.. காரணத்தை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க

  • கான்பூர்: பெற்ற மகள் மீது அப்பாவுக்கு கோபம் வரலாம்.. தான் ஆசையாக வளர்த்த மகள், தன் பேச்சை கேட்கவில்லை என்ற வருத்தமும் இருக்கலாம்.. ஆனால், அந்த கோபம் எந்த எல்லை வரை போகும்? உத்தரப் பிரதேசத்தில் ஒரு விவசாயி செய்த காரியத்தை கேட்டால், இப்படியுமா செய்வார்கள் என்று அதிர்ச்சியாகிவிடுவீங்க.. அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் ஜகதீஷ்சராய் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசிக்கும் விவசாயி பிரகாஷ் சிங்கின் மூத்த மகள் நேஹா சிங் (20). இந்த பெண் டிகிரி படித்துள்ளார்.. நேஹாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சாவன் பாஸ்வான் (24) என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.. சாவன், கால்நடை வளர்ப்புத் துறையில் 4ம் நிலை ஊழியராக பணியாற்றும் கிஷோரி பாஸ்வான் என்பவரின் மகன் ஆவார்.

    Advertisement

    காதல் திருமணம் - சாதி பிரச்சனை

    இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தது, நேஹாவின் குடும்பத்தினருக்கு தெரிந்தவிட்டது.. வேறு சாதியை சேர்ந்த இளைஞனுக்கு தங்கள் மகளை திருமணம் செய்து வைப்பதில் அவர்களுக்கு விருப்பமும் இல்லை.. தங்கள் சாதியிலேயே மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக இருந்தது.. ஆனால், குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி நேஹா தனது காதலை தொடர்ந்துள்ளார்..

    இப்படியே காத்திருந்தால், தன்னுடைய வீட்டில் வேறு நபருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று கருதிய நேஹா, சுமார் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சாவனுடன் சென்று விட்டார்.. அத்துடன் 2 பேரும் கோர்ட்டில் பதிவு திருமணமும் செய்துகொண்டுள்ளனர்.. திருமணத்துக்கு பிறகு உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா பகுதியில் கணவன், மனைவியாக வசிக்க துவங்கினார்கள்..

    Advertisement

    ஆனால், மகள் இப்படி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதை பிரகாஷ் சிங் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எப்படியாவது மகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்தார்கள்..

    இதற்காக நேஹாவை தொடர்புகொண்டு வீட்டுக்கு திரும்பி வருமாறும், தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறும் பலமுறை சமாதானப்படுத்தினார்கள்.. ஆனால், முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.. நேஹா தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.. இதனால் மகள் மனம் மாறி வீட்டுக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த குடும்பத்தினரின் நம்பிக்கை உடைய துவங்கியது.. அத்துடன் பிரகாஷ் சிங் தனது மகளுடனான உறவையே முறித்துக்கொள்ளும் முடிவுக்கும் சென்றார்..

    Advertisement

    மகளுக்கு பிண்ட தானம்

    பொதுவாக இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக பிண்ட தானம், சிரார்த்தம் போன்ற சடங்குகள் செய்யப்படுவது வழக்கம்.. ஆனால், பிரகாஷ் சிங் தனது உயிருடன் இருக்கும் மகளுக்காகவே இந்த சடங்குகளை செய்துவிடுவது என முடிவெடுததார்..

    பித்ரு விசர்ஜன் நாளையொட்டி, கடந்த சனிக்கிழமை அதாவது மாகாள அமாவாயன்று இந்த சடங்கை செய்தார்.. தன் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திலிருந்த மரத்தடியில் பிரகாஷ் சிங் தனது மகளுக்காக பிண்ட தானம் உள்ளிட்ட சடங்குகளை செய்துள்ளார்..

    பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்

    இதுகுறித்து பிரகாஷ் சிங் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "மகள் வேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட கோபமும் மனவேதனையும்தான் இந்த முடிவுக்கு காரணம்.. இதன்மூலம் மகளுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டேன்..

    Advertisement

    என்னை பொறுத்தவரை மகள் இறந்துவிட்டாள். பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெற்றோர் நிறைய தியாகங்களை செய்கிறார்கள்.. அவர்களை வளர்த்து, படிக்க வைத்து, வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்..

    அண்ணன் மகள் - சித்தப்பா வேதனை

    அப்படியிருக்கும்போது வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது, குடும்பத்தினரின் உணர்வுகளையும் விருப்பத்தையும் பிள்ளைகள் கருத்தில் கொள்ள வேண்டும்.. எங்கள் மகள், எங்களுடைய சம்மதம் இல்லாமலேயே திருமணம் செய்துகொண்டது மிகுந்த வேதனையை தந்துவிட்டுது.. அந்த மனவருத்தத்தை வெளிப்படுத்தவே இப்படியான சடங்கை செய்துள்ளோம்" என்றார்.

    நேஹாவின் சித்தப்பா பப்பு சிங் இதுகுறித்து சொல்லும்போது, "நேஹா என் அண்ணன் மகள். ஆனால் என் சொந்த மகளை போலவே வளர்த்தேன்.. படிக்க வைத்தேன்.. பட்டப்படிப்பு முடிந்ததும் எங்கள் சாதியிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைத்தோம்.. ஆனால், வேறு சாதியை சேர்ந்த இளைஞரை அவர் திருமணம் செய்துகொண்டதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் என் அண்ணன் செய்த சடங்கில் நாங்களும் கலந்து கொண்டுள்ளோம்" என்றார்.

    Advertisement

    இதை எப்படி பார்ப்பது?

    ஒருபுறம், தனது விருப்பப்படி வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார் நேஹா, மறுபுறம், தந்தை, உயிருடன் இருக்கும் மகளுக்கே இறுதிச் சடங்குகளை செய்திருக்கிறார்.. இதை எப்படி பார்ப்பது??

    பிள்ளைகள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் பெற்றோரின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது உண்மைதான்.. அதே நேரத்தில், பெற்றோரும் பிள்ளைகளின் விருப்பத்தையும் சுதந்திரத்தையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.. உயிரோடு இருக்கும் மகளை இறந்துவிட்டதாக கருதி பிண்ட தானம் செய்வது எந்த வகையிலும் நியாயமாகாது..

    சாதி வேறுபாட்டுக்காக ஒரு பெற்றோர், மகளுடனான உறவையே முறித்துக்கொள்ள நினைப்பது வேதனையான விஷயம்.. கருத்து வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும், பேசித் தீர்ப்பதற்கான கதவுகளை மூடிவிடாமல் இருப்பதுதான் ஒரு குடும்பத்துக்கு நல்லது..!!!

    English Summary

    Daughter Pind Daan.. Farmer Father Performs Shocking Ritual Under a Tree, But Why?