கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா?

  • சென்னை: உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு அரிய வானியல் நிகழ்வாக, ஆகஸ்ட் 12-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

    Advertisement

    கிரகணத்தின்போது சூரியனை நிலவு மறைக்கும் என்பதால், குறிப்பிட்ட நேரம் வரை சூரிய வெளிச்சம் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

    Advertisement

    ஐரோப்பாவில் ஒரு வரலாற்று நிகழ்வு

    கடந்த 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஐரோப்பிய கண்டத்தில் தென்படப்போகும் முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வு மீண்டும் நிகழ உள்ளதால், இதனைக்காண இப்போதே சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் திட்டமிட்டு வருகின்றனர்.

    எந்தெந்த நாடுகளில் தெரியும்?

    இந்த முழு சூரிய கிரகணத்தின் பாதை முக்கியமாக வட அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகச் செல்கிறது. இது கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், ரஷ்யாவின் ஒரு பகுதி மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் முழுமையாகத் தெரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பெயினில் இந்த கிரகணம் மிகத் தெளிவாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்தியாவில் காண முடியுமா?

    இந்திய விண்வெளி ஆர்வலர்களுக்கு இது ஒரு ஏமாற்றமான செய்தியாக இருக்கலாம். இந்த சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் இந்தியாவில் இரவு நேரமாக இருக்கும் என்பதால், இதனை இந்தியாவில் நேரடியாகக் காண முடியாது. இருப்பினும், இணையதளங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்கள் மூலம் நேரலையில் இந்த நிகழ்வை மக்கள் கண்டு ரசிக்கலாம்.

    முழு சூரிய கிரகணம் என்றால் என்ன?

    நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும்போது, சூரியனின் ஒளி மறைக்கப்பட்டு பூமியின் ஒரு பகுதியில் நிழல் விழும் நிகழ்வே சூரிய கிரகணம் எனப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்பட்டு, பகல் நேரத்திலும் சில நிமிடங்கள் இருள் சூழும்.

    Advertisement

    பாதுகாப்பு எச்சரிக்கை

    சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகள் அல்லது பிரத்யேக கருவிகளைப் பயன்படுத்தி மட்டுமே இதைக் காண வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.

    English Summary

    A total solar eclipse is set to occur on August 12, a rare astronomical event that has generated great anticipation among space enthusiasts and scientists worldwide.