நச்சுப் பாம்பு காங்., தவெகவின் Proxy ஆட்சி ! #FairDelimitation to #NoDelimitation.. தயாநிதி அட்டாக்!

  • சென்னை: தமிழ்நாட்டில் மட்டும் #NoDelimitation நாடகம் ஏன்? தங்கள் Proxy அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த திரு. ரேவந்த் ரெட்டி அவர்களைக் கேள்வி கேட்கத் துணியுமா? என திமுக எம்பி தயாநிதி மாறன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," த.வெ.க. அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?

    Advertisement

    #FairDelimitation என்ற நிலைப்பாட்டிலிருந்து #NoDelimitation என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா? அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?

    #NoDelimitation என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான திரு. ரேவந்த் ரெட்டி அவர்கள், #Delimitation நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்? தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது #PettyPolitics அன்றி வேறல்ல. நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்." என கூறியுள்ளார்.

    Advertisement

    தொகுதி மறுவரையறையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க வர வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஜோசப் விஜய் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 57 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அவர்களில் 20 பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அதாவது பாதிக்கும் குறைவான எம்பிக்களே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக, அதிமுக, தேமுதிக, பாமக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை - மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் தவெக கூட்டணியில் வசிக்கும் கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் தயாநிதி மாறன்.

    English Summary

    DMK MP Dayanidhi Maran questions Congress over its delimitation stance and alleges political hypocrisy in Tamil Nadu.