8 கிமீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நள்ளிரவு மழை விடாது.. 25 மாவட்டங்களுக்கு அலர்ட்

  • சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 820 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ள நிலையில் நாளை மறுநாள் காலை தீவிர புயலாக மாறும் என்றும், வரும் 28 ஆம் தேதி காலை பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

    Advertisement

    இதே போன்று தென் மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 மணி திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    Advertisement

    விட்டு விளாசிய கனமழை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இன்று தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவை, நீலகிரியில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. திண்டுக்கல், ஈரோடு, திருப்பூரிலும் கனமழை விட்டு விளாசியது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும் பரவலாக மிதமான மழையும் கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்று இரவு முதல் நாளை காலை 10 மணி வரை டெல்டா மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதி தீவிர புயலாக கரையை கடக்கும்

    இதனிடையே வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது என்றும், விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 820 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    Depression: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதி தீவிர புயலாக மாறலாம்.. வானிலை மையம் எச்சரிக்கை

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறும் என்றும், நாளை மறுநாள் காலை தீவிர புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி காலை பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாக இன்று நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

    Advertisement

    6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

    குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு டூ நாகப்பட்டினம் வரை.. 7 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!

    இதே போன்று அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், குமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சை, நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Deep depression: The Meteorological Department has stated that the deep depression over the Bay of Bengal has been moving at a speed of 8 km/h for the past six hours. Currently centered 820 km east-southeast of Visakhapatnam, the system is expected to intensify into a severe cyclonic storm by the morning of the day after tomorrow. The Meteorological Department further predicts that it will cross the coast between Bapatla and Visakhapatnam on the morning of the 28th as a very severe cyclonic storm.