நாளை தீபாவளி.. ஆனாலும் செங்கல்பட்டில் டிராபிக் குறையல! தவெக அரசுக்கு பெரிய டாஸ்க்

  • சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் சென்னையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் நடக்குற கதைதான் இது. இருந்தாலும், தவெக அரசு இந்த பிரச்சனையை எப்படி சரி செய்யப்போகிறது என்பதே கேள்வி.

    Advertisement

    சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இன்னும் சென்றுக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால், போய் சேர இடம் இருந்தாலும்.. போவதற்குதான் வழியில்லை.

    Advertisement

    இன்று மதிய நிலவரப்படி செங்கல்பட்டில் பல கி.மீ துரத்திற்கு வாகனங்கள் பொறுமையாக நகர்ந்து வருகின்றன. அதிமுக, திமுக ஆட்சியில் நிலைமை இப்படித்தான் இருந்தது. ஆனால், மாற்றத்தை உருவாக்குவோம் என்று சொன்ன தவெக.. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. 8 வழிச்சாலை அமைப்பதுதான் இந்த நெரிசலுக்கு தீர்வு என பேசுகிறார்கள் சிலர். கைக்கு சுண்ணாம்பு கேட்டால்.. கடை தெருவுக்கு வழி சொல்லும் கதைதான் இது.

    சிங்கப்பெருமாள் கோவில், ஜிஎஸ்டி சாலையில் ஹெவி டிராபிக்! வண்டலூர், பொத்தேரியில் வாகன ஓட்டிகள் தவிப்பு
    Advertisement

    பின்ன என்னங்க.. ரோடு அகலமா போட்டா மட்டும் நெரிசல் குறைந்துவிடுமா? சீனாகிட்ட இல்லாத ரோடா! ஆனால் கடந்த 2010ல் சீனாவில் பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டது. 1, 2 கி.மீ இல்லை.. 100 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக 12 நாட்களுக்கு போக்குவரத்து நெரிசல் நீடித்தது. வரலாற்றில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் இது. தேசிய அவமானமாக பார்த்த சீன அரசாங்கம்.. பிரச்சனையை சரி செய்ய யோசித்தது.

    ஆய்வாளர்கள் நாலு பேரை கூப்பிட்டு.. இதுக்கு என்ன காரணம்? என கேட்க.. அவர்கள் அறிக்கை கொடுத்தனர். ரோடு நல்லாதான் இருக்கு.. ஆனால், கார் போன்ற தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாயிடுச்சு! இன்னும் பெரிய ரோடு போட்டா.. இன்னும் கூடுதலாக கார்களை மக்கள் வாங்குவார்கள். பாலங்கள் கட்டினாலும் அதே நிலைமைதான். இதை சரி செய்யனும்னா.. மெட்ரோ ரயில், பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்தை அதிகரிக்கணும் என அறிக்கையில் சொல்லியிருந்தார்கள்.

    Advertisement

    அவங்க சொன்ன மாதிரியே மெட்ரோ ரயில்களின் நீளம் அதிகரிக்கப்பட்டது. பேருந்துகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. பேருந்துகளுக்கு என தனி பாதையும் அமைக்கப்பட்டது. அதேபோல குடியிருப்பு பகுதிகளிலிருந்து பேருந்து நிலையங்களுக்கு ஈஸியாக போக.. வாடகை சைக்கிள்களும், மின்சார பேருந்துகளும் கொண்டுவரப்பட்டன. அப்புறம் என்ன.. பொதுப்போக்குவரத்து மக்கள் மத்தியில் பேமஸாக தொடங்கியது. கார்களை விட பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களில் செல்வதையும்தான் மக்கள் விரும்பினர்.

    சீனா இத்துடன் நின்றுவிடவில்லை. கார்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தியது. புதியதாக கார் வாங்குவதை விட.. அதை ரோட்டில் ஓட்ட அனுமதி வாங்குவதுதான் ரொம்பவே கஷ்டம். காரின் விலை ரூ.6 லட்சம் எனில்.. அதற்கான அனுமதியை வாங்க ரூ.10 லட்சம் வரை செலவாகும். எனவே, மக்கள் கார்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இப்படித்தான் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெரிய நகரங்களில் அரசு, டிராபிக்கை கட்டுக்குள் கொண்டுவந்தது.

    Advertisement
    சென்னையில் வழக்கம் போல ஹெவி டிராபிக்! 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

    நம்மூரிலும் இதையெல்லாம் செய்யலாம். மத்திய அரசுடன் சுமுகமாக போக விரும்புவதாக சொல்லும் தவெக அரசு, தமிழ்நாட்டின் கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டுவரலாம். அதேபோல.. சென்னையிலிருந்து பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊர் போக வசதியாக கூடுதல் ரயில்களை இயக்க சொல்லி கேட்கலாம். அதேபோல.. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களின் சார்பில் கூடுதல் பேருந்துகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

    கோயம்பேடு பகுதியில் பேருந்து நிலையம் இருந்தவரை மக்கள் பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. இப்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால், கனெக்டிங் பேருந்துகளுக்கு மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். பிராக்டிகலாக பார்த்தால் இது ஃபெய்லியர்தான். எனவே இந்த பிரச்சனைகளையெல்லாம் தவெக அரசு சரி செய்யுமா? பொங்கலுக்காவது மக்கள் நெரிசல் இல்லாமல் சொந்த ஊருக்கு போவார்களா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

    English Summary

    Traffic in Chengalpattu: With the Diwali festival set to be celebrated tomorrow, people are traveling from Chennai to their hometowns. As a result, there is severe traffic congestion in the Chennai and Chengalpattu districts. This is a recurring story every year; however, the question remains: how does the TVK administration intend to address this issue?