தொகுதி மறுவரையறை மசோதா.. முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம்! யார் யார் பங்கேற்பு? லிஸ்ட்

  • சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் யார் யார் பங்கேற்றுள்ளார்கள்.. காங்கிரஸ் எம்பி சுதா ஆப்செண்ட் ஆனது ஏன்? என்பது பற்றிய விவரங்கள் பார்க்கலாம்.

    Advertisement

    சென்னை கலைவாணர் அரங்கில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, மநீம எம்.பிக்கள் கலந்து கொள்ளவில்லை. மொத்தமுள்ள 57 எம்.பிக்களில் 36 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் எம்பி சுதா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆப்செண்ட் ஆகியுள்ளார்.

    Advertisement

    தொகுதி மறுவரையறை மசோதா

    தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இதனை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்த போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்ததால் பாஜகவால் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மற்றும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியது, மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் அணியில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏக்னாத் ஷிண்டே பக்கம் தாவியது உள்ளிட்ட காரணங்களால் இப்போது கொண்டு வந்தால் நிறைவேற்றிட முடியும் என கணக்கு போடுகிறது.

    Advertisement

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தான், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் அழைப்பு விடுத்தார். இதற்கான எம்பிக்களுடன் விஜய் ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்தார்.

    19 எம்பிக்கள் பங்கேற்பு

    தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் விஜய் தலைமையில் இன்று 3 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், அதிமுக, பாமக, தேமுதிக, மநீம ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்கவில்லை.

    Advertisement

    அதாவது மொத்தமுள்ள 57 எம்.பிக்களில் 37 எம்.பிக்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். மீதமுள்ள 20 எம்பிக்கள் பங்கேற்பார்கள் என கருதப்பட்ட நிலையில் 19 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்றனர். அதாவது காங்கிரஸ் எம்.பி சுதா மட்டும் இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை.

    யார் யார் பங்கேற்றனர்?

    காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், ஜோதிமணி, ப சிதம்பரம், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்று உள்ளனர். விசிக சார்பில், தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நவாஸ் கனி, கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் தலா ஒரு எம்பிக்கள், மதிமுக துரை வைகோ இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    Advertisement

    காங்கிரஸ் எம்பி ஏன் பங்கேற்கவில்லை

    காங்கிரஸ் சார்பில் சுதா எம்பி மட்டும் பங்கேற்கவில்லை. அவர் கர்நாடகாவில் கட்சி நிகழ்ச்சியில் இருப்பதால் பங்கேறக இயலவில்லை என்று கூறியுள்ளார்.

    English Summary

    Delimitation Bill: A consultative meeting of MPs regarding the constituency delimitation issue is currently underway at the Kalaivanar Arangam in Chennai, led by Chief Minister Vijay. While major opposition parties have boycotted the meeting, let us look at the details of who is participating and why Congress MP Sudha is absent.