காவிரிக்காக தொகுதி வரையறை பிரச்சனை பேசாமல் இருக்க முடியுமா?.. கனிமொழிக்கு திருமாவளவன் பதிலடி

  • சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக ஒரு பொது பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. தேசிய அரசியலை நோக்கி தவெக வைத்துள்ள நகர்வு பேசு பொருளாகியுள்ளது. காவிரி விஷயத்தை திசை திருப்பவும், காங்கிரஸ் வருத்தப்பட கூடாது என்பதற்காகவும் தவெக அரசு இக்கூட்டத்தை கூட்டியதாக திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல், மதிமுக எம்பிக்கள் கலந்து கொண்டனர். திமுக, அதிமுக, பாமக, மநீம எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை. காவிரி விஷயத்தை திசை திருப்புவதற்காக தவெக அரசியல் நாடகமாடுவமாக திமுக இதை கடுமையாக விமர்சித்து வருகிறது.

    Advertisement

    தேசியளவில் பாதிப்பு

    இந்நிலையில் சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தொகுதி மறுவரையறை கூட்டம் நடத்துவதால் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முடியாது. காவிரி பிரச்சனை தனி. அது மிகவும் கொந்தளிக்கும் பிரச்சனை, எரியும் பிரச்சனை. அந்த பிரச்சனைக்கு வேறு மதிப்பு இருக்கிறது. அதேபோல தொகுதி மறுவரையறையும் ஒரு பிரச்சனை தான்.

    காவிரி எந்தளவுக்கு முக்கியமான பிரச்சனையோ, அதே அளவுக்கு முக்கியமானது தொகுதி மறுவரையறை பிரச்சனை. காவிரி நீர் பிரச்சனையை விட தொகுதி மறுவரையறை முக்கியமான பிரச்சனையில்ல என்று தள்ளப்படும் நிலை அல்ல. தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட்டால் தேசியளவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காவிரி, மேகதாது தமிழகத்திற்கான பெரிய பிரச்சனை. இதனையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். அதனையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

    Advertisement

    மாற்றம் கூடாது

    காவிரி பிரச்சனைக்காக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இதேபோல காவிரி பிரச்சனைக்காக தவெக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி ஆலோசிக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி கொண்டிருக்கிறோம். இதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும். தொகுதி மறுவரையறை கூடவே கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இந்தியாவில் 543 தொகுதிகள் என்பதிலோ, தமிழகத்தில் 39 தொகுதிகள் என்பதிலோ எந்த மாற்றமும் இருக்க கூடாது.

    நியாயமான தொகுதி மறுவரையறை என்ற ஒன்றில்லை. இதை எதிர்த்து எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியை எடுத்த முதலமைச்சரின் அணுகுமுறையை வரவேற்கிறோம். திமுக, அதிமுக எம்பிக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் பழைய முடிவில் தான் இருப்பார்கள் என நம்புகிறேன். தொகுதி மறுவரையறையில் எங்கள் முடிவையே அவர்களும் பிரதிபலிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

    English Summary

    VCK Thirumavalavan said, Delimitation is national issue. Cauvery also big issue. But we cant ignore this for that.