“U டர்ன்” போட்டாரா விஜய்? தொகுதி மறுவரையறை தொடர்பாக தவெக கொடுத்த விளக்கம்!

  • சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் 'அந்தர் பல்டி' அடித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையை அடுத்த கோவளத்தில் தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார், கேரளா முதல்வர் சதீஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், "தொகுதி மறுவரையறையின் போது மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் கடந்த வாரம்,, தற்போதைய மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 543 என்பதை உயர்த்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது பிரதிநிதித்துவம் குறையாத அளவுக்கு தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் பேசி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    543 எம்.பிக்கள் என்ற எண்ணிக்கையை மாற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து முதல் அமைச்சர் விஜய் ஒரே வாரத்தில் மாறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. போன வாரம் தொகுதி மறுவரையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இன்று அமித் ஷா முன்னிலை பல்டி அடித்துள்ளார் விஜய் என விமர்சிக்கப்படுகிறது.

    Advertisement

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "ஒவ்வொரு மாநிலங்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மின்சார தேவை இருந்தது. நம்முடைய நிலங்கள் அதிகமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதே மாதிரி ஒவ்வொரு மாநிலங்களின் தேவைகள், பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அடுத்த கூட்டம் தெலுங்கானாவில் வைக்கலாமா? என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 543- என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. யாரும் திரித்துப் பேச வேண்டாம்.

    காவிரி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம். எனவே அது குறித்து இந்த கவுன்சிலில் விவாதிக்கவில்லை. முல்லை பெரியாறு அணை உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் 39 எம்பிக்கள் தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.தென் மாநிலங்களைத்தான் தொகுதி மறுவரையறை பாதிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில், தவெக ஐ.டி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "மாமல்லபுரத்தில் இன்று நடந்த 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களால் ஆற்றப்பட்ட உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 12.8.2026 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது. அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி 12.8.2026 அன்றே பிரதமர் அவர்களுக்கும் நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Amidst criticism from opposition parties accusing Tamil Nadu Chief Minister Vijay of making a sudden U-turn regarding the constituency delimitation issue, TVK has issued a clarification, stating that misinformation is being spread about the matter.