50% ஆபர் தூண்டிலும், 2011 கணக்கெடுப்பும்.. தொகுதி மறுவரையறையில் நடப்பது என்ன? மாணிக்கம் தாகூர்

  • சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இந்தியாவின் இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் மிகப்பெரிய அரசியல் சதி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த அனைவரும் முன்வர வேண்டும்" என்றும் மீண்டும் அறைகூவல் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மத்திய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் அரசியல் களம் கொந்தளித்து காணப்படுகிறது.. 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உரையாற்றியிருந்தார்.

    Advertisement

    தொகுதி மறுவரையறை

    தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களின் குரலை ஒடுக்குவதே பாஜகவின் முதன்மை இலக்கு என்று கடுமையாக சாடியிருந்தார். இந்த விவகாரம் கட்சி அரசியலைக் கடந்த தமிழ்நாட்டின் உரிமை, எதிர்காலம் மற்றும் இறைமையைப் பாதுகாக்கும் போராட்டம் என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தான மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று அவர் அன்றைய கூட்டத்தில் உரக்கக் குரல் கொடுத்திருந்தார்.

    இந்நிலையில், சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இந்தியாவின் இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் மிகப்பெரிய அரசியல் சதி என்று மீண்டும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், "கடந்த ஏப்.17-ம் தேதி இண்டியா கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட ஆபத்தான தொகுதி மறுவரையறை மசோதாவை, "50 சதவீத தொகுதி உயர்வு" என்ற ஆசையைக் காட்டி மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.

    மக்கள்தொகை கட்டுப்பாடு

    மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய தமிழகத்துக்கு தண்டனையும், மக்கள்தொகையை கட்டுப்படுத்த தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி. தொகுதி எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தினால், உத்தரப்பிரதேசத்தின் தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழகத்தின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும்.

    Advertisement

    இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும். நாடாளுமன்றத்தில் இந்த இடைவெளி அதிகரிப்பது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.

    இறையாண்மை, கூட்டாட்சி தத்துவம்

    இந்த மசோதா இந்தியாவின் இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் மிகப்பெரிய அரசியல் சதி. கடந்த காலத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் 2001-ல் வாஜ்பாய் ஆகியோர் கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள் மூலமாக மக்களவைத் தொகுதி எண்ணிக்கை முடக்கி வைக்கப்பட்டது. அந்த பாதுகாப்பை தகர்க்கவே பாஜக தற்போது முயற்சிக்கிறது.

    மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதை செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளை சரியாக தீர்மானிக்க முடியாது. எனவே, தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த அனைவரும் முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதான் காரணம்

    மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதே மாணிக்கம் தாகூரின் எண்ணமாகும். ஏனென்றால் மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், வட மாநிலங்களின் அரசியல் ஆதிக்கம் அதிகரித்துத் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் கூட்டாட்சி உரிமைகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதே இதற்குக் காரணமாகும்...!!

    English Summary

    Delimitation Trap? 50% Seat Boost & 2011 Census.. Manickam Tagore Warns Tamil Nadu