கட்டுப்படி ஆகாத மானியம்.. விவசாயிகள் கேட்பது இதுதான்! டெல்டாவை காப்பாற்றுவாரா விஜய்?

  • சென்னை: இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால், டெல்டா மாவட்டம் வறட்சியில் சிக்கியிருக்கிறது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், விவசாயிகளுக்கு 'குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2026' அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் பெரும்பாலும் தங்களுக்கு பயனப்பாடாது என்றும், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடிதான் வேளாண் தொழிலை பாதுகாக்கும் என்றும் விவசாயிகள் கூறியிருக்கின்றனர்.

    Advertisement

    இன்று தவெக அரசு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. அதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

    Advertisement

    மேட்டூரும் டெல்டாவும்

    ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீரை நம்பி 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறும். ஆனால், கர்நாடகா போதுமான நீரை திறக்காததால்.. இந்த ஆண்டு குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவக்கு நடக்கவில்லை. ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்கள் மட்டுமே சாகுபடியை தொடங்கியிருக்கின்றனர். முழுமையாக மேட்டூர் தண்ணீரை நம்பியிருப்பவர்கள், தலையில் துண்டை போட்டு ஏமாந்து போயுள்ளனர்.

    அரசின் அறிவிப்பு

    இப்படி ஏமாந்த விவசாயிகள்.. பயிர்க்கடன் தள்ளுபடி என்கிற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்தால், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தும், ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகபட்சமாக ரூ.75000 மட்டுமே கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. காவிரி நீர் கிடைகாததால் விவசாயிகள் அதிருப்தியில் இருக்கும் நிலையில்.. முழுமையான பயிர்க்கடன் குறித்து தவெக அரசு வாய் திறக்காமல் இருப்பது.. விவாசிகளை மேலும் டென்ஷனாக்கியிருக்கிறது. எனவே இதை சாமாளிக்கதான் 'குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு' திட்டத்தை அரசு அறிவித்திருந்தது.

    Advertisement

    குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு

    இந்த திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு தடையில்லா 18 மணி நேர மும்முனை மின்சாரம், குறைந்த தண்ணீரில் சாகுபடி செய்பவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படும். இது விவசாயிகளுக்கு பலன் தரும்.. ஆனால், சொந்தமாக பம்பு செட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பலன் கொடுக்கும். முழுக்க முழுக்க மேட்டூர் தண்ணீரை நம்பியிருப்பவர்களுக்கு எந்த பலனும் கிடையாது. டெல்டாவில் பெரும்பாலான விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே முழுமையாக நம்பி விவசாயம் செய்கிறார்கள்.

    கோரிக்கையை ஏற்குமா தவெக அரசு?

    அப்படி எனில், இதற்கு என்னதான் தீர்வு? என்று கேட்டால்.. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது மட்டுமே ஒரே தீர்வு என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே இந்த வேளாண் பட்ஜெட் அறிவிப்பில் பயிர்க்கடன் தள்ளுபடி இருக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. டெல்டா விவசாயத்தை தவெக தலைமையிலான தமிழக அரசு காக்குமா? என்றும் விவசாயிகள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

    English Summary

    Delta Districts: Kuruvai cultivation has been affected as the Mettur Dam was not opened this year. Nevertheless, the 'Special Package Scheme for Kuruvai Cultivation 2026' has been announced for farmers. Farmers have stated that this scheme will largely be of no benefit to them and that a complete waiver of crop loans is what would truly safeguard the agricultural sector.