தவெக பக்கம் செல்லும் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அதிமுக எம்எல்ஏ.. டெல்டாவில் நடக்கப்போகும் அதிரடி!

  • சென்னை: டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வரின் பெயர் கொண்ட அதிமுக எம்எல்ஏ ஒருவர் தவெக பக்கம் நகர்வதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அதிருப்தி அணியில் இருந்த அந்த எம்எல்ஏ, தற்போது தனியாளாக தவெக பக்கம் நகரும் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை பிடித்த நாளில் இருந்தே அதிமுகவினரை தங்கள் பக்கம் வருமாறு அழைப்பு விடுத்து வருகிறது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏ-க்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதிலும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மரகதம் குமரவேல், சத்தியபாமா வென்றுவிட்டனர்.

    Advertisement

    இதன்பின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரடியாகவே அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்தார். அதேபோல் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் இன்னும் அதிருப்தி எம்எல்ஏ-க்களாகவே தொடர்ந்து வருகின்றனர். எஸ்பி வேலுமணி மீண்டும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை நடத்திய போது, அவருக்கு 13 பேரின் ஆதரவு இருந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் தவெக அடுத்தக் கட்டமாக சில காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வரின் பெயர் கொண்ட ஒரு அதிமுக எம்எல்ஏ தவெக பக்கம் செல்ல பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார். அவர் அதிமுக ஆட்சியில் இருந்த போது முக்கிய துறையின் அமைச்சராகவும் இருந்தவர்.

    Advertisement

    டெல்டா மாவட்டம் திமுகவின் கோட்டையாக இருந்தாலும், அந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் தவெகவில் அவருக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருந்திருக்கிறது. அந்த அதிமுக எம்எல்ஏ வைத்த டிமாண்ட்களை தவெகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் விரைவில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவர் தவெகவில் இணையக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.

    உள்ளாட்சித் தேர்தலில் கட்சி கட்டமப்பு இல்லாமல், தவெகவால், கிராமப் புறங்களில் வெற்றி பெற முடியாது. இதனால் அதிமுகவில் வலுவான கட்டமைப்புடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு தவெக வலைவீசி வருகிறது. இந்த வலையில் முன்னாள் முதல்வரின் பெயர் கொண்ட ஒருவர் சிக்கி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து யார் யார் தவெக பக்கம் நகர்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    English Summary

    Delta Region AIADMK MLA Named After Ex-CM Eyed for Switch to Vijay TVK