Depression: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இரவோடு இரவாக மழை வெளுக்க போகுது.. 31 மாவட்டங்களுக்கு அலர்ட்

  • சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது எனவும் இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகம் முழுக்க நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை முதல் குமரி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.

    Advertisement

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

    இந்நிலையில் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு அருகே நேற்று முன் தினம் மாலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது படிப்படியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவான நிலையில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் மேலும் வலுப்பெற்று வருகிறது.

    Advertisement

    31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    நாளை அல்லது நாளை மறுநாள் அர்னாப் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று கூறியுள்ளது. மேலும் நள்ளிரவு ஒரு மணி வரை தமிழகம் முழுக்க 31 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    "தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், குமரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, திருப்பத்தூர், திருச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 31 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Depression in the Bay of Bengal: The Chennai Regional Meteorological Centre has announced that the deep depression over the Bay of Bengal has intensified into a depression and is moving in a north-northwesterly direction. Consequently, heavy rains accompanied by thunder and lightning are expected across Tamil Nadu until 1:00 AM, and a warning has been issued for 31 districts, including Chennai.