Where Is KAS?: ஆமா எல்லாம் சரி! பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனை களத்திலே காணோமே!

  • சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு வரும் நிலையில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனை களத்தில் பார்க்க முடியவில்லையே!

    Advertisement

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலைகல், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    Advertisement

    சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 29 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27 செ.மீ., சாத்தாங்காட்டில் 26 செ.மீ, திருவொற்றியூரில் 22 செ.மீ., எண்ணூரில் 21 செ.மீ., கார்கில் நகர் 19 செ.மீ., சைதாப்பேட்டை 17 செ.மீ., வடபழனி 16 செ.மீ., நுங்கம்பாக்கம் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

    இந்த மழை மேக வெடிப்பு என தமிழ்நாடு வெதர்மேன் கூறினாலும் இது மேக வெடிப்பு அல்ல, தொடர் மழை என வானிலை மையம் மறுத்து வருகிறது.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை

    பொதுவாக வடகிழக்கு பருவமழை என்றாலே வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, சென்னை மாநகராட்சி ஆணையர் என பெரும்பாலான அதிகாரிகளும் அமைச்சர்களும் தூக்கமில்லாமல் பணியாற்றி மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதுண்டு.

    அந்த வகையில் நேற்று பெய்த மழையின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் களத்தில் பணியாற்றினார். எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் தண்ணீரை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தார்.

    1500 பணியாளர்கள்

    நேற்று இரவு பெய்த மழையால் 15,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 650 மோட்டார் பம்புகள், NDRF 1 குழு, TNDRF 4 குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டன. இதன் விளைவாக 21 சுரங்கப்பாதைகளும் காலை 6 மணிக்குள் திறக்கப்பட்டு, 9 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, உயிரிழப்பு இல்லாமல் சென்னை வழக்கம் போல் தனது கண்களை விழித்தது.

    Advertisement

    மாநகராட்சி ஆணையர்

    பொழுது விடிந்த பிறகுதான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாநகராட்சி ஆணையருடன் மீட்பு பணிகளை பார்வையிட்டார். அது போல் அமைச்சர் ராஜ்மோகன் தனது பேட்டியில் ஒரு இடத்தில் கூட தண்ணீர் தேங்கவில்லை என்றார். அது போல் அமைச்சர் தென்னரசுவும் ஆங்காங்கே ஆய்வுக்கு சென்றிருந்தார்.

    சிக்கும் நடிகைகள்? கிலோ கணக்கில் சிக்கிய மெத்..இண்டர்நேசனல் கும்பலுடன் தவெக நிர்வாகிக்கு கனெக்‌ஷன்?

    ஆனால் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனை எங்கும் பார்க்க முடியவில்லை. பேரிடர் மீட்பு குழு அலுவலகத்திற்கு கூட அவர் வரவில்லை. பிற்பகல் 2 மணி நிலவரப்படி அவரை பொதுவெளியில் பார்க்க முடியவில்லை.

    Advertisement

    பேரிடர் மேலாண்மைத் துறை

    பேரிடர் மேலாண்மைத் துறைதான் வேண்டும், அப்போதுதான் மக்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என இந்த துறையை கேட்டு வாங்கியதாக அவரே கூறியிருந்த நிலையில் தற்போது மக்களுக்கு ஒரு பிரச்சினை எனும் போது சீனுக்குள் அவரை காணவில்லை.

    கடந்த திமுக ஆட்சியில் மழை என்றாலே பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் கன்ட்ரோல் ரூமிலேயே இருந்து பல்வேறு பணிகளை முடுக்கிவிடுவார். ஆனால் தற்போது செங்கோட்டையன் கன்ட்ரோல் ரூமில் இல்லை என தகவல்கள் கிடைத்துள்ளன. இதுவரை இருந்த முதல்வர்கள் எல்லாரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கன்ட்ரோல் ரூமுக்கு வருவார்கள், அங்கு யாராவது போன் செய்தால் எடுத்து பேசி அவர்கள் இருக்கும் பகுதியின் வெள்ள நிலவரத்தை கேட்பார்கள். ஆனால் முதல்வர் விஜய் இதுவரை கன்ட்ரோல் ரூமுக்கு செல்லவில்லை.

    English Summary

    Where is Sengottaiyan? Despite he is a Disaster Management minister, he is not in control room or review any rain affected place.