'சலோமியா' பாடலை பாடி.. தேவா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்.. ரசிகர்களின் மறக்க முடியாத இசை அஞ்சலி

  • ராணிப்பேட்டை: தேனிசை தென்றல் இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி, சலோமியா பாடலை பாடி இசை அஞ்சலி செலுத்திய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தேனிசை தென்றல் இசையமைப்பாளர் தேவா உடல்நலக் குறைவால் காலமானார். 75 வயதிலும் பல்வேறு இசை துறையில் சுறுசுறுப்புடன் இயங்கி வந்த தேவாவின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Advertisement

    இதன்பின் தேவாவின் உடல் ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டது. முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதன்பின் தேவாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று மாலை அவரின் உடல் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உள்ளூர் மக்களும், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் தேவாவுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நிறைவடைந்தது.

    Advertisement

    இதன்பின் அவரின் மகன் ஸ்ரீகாந்த் தேவா கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தார். அங்கிருந்து குடும்பத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற, ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சலோமியா பாடலை பாடி தேவாவுக்கு இசை அஞ்சலி செலுத்தினர். தேவவின் ஐகானிக் பாடலில் இது முக்கியத்துவம் வாய்ந்தது.

    அதனை பாடி தேவாவுக்கு இசை அஞ்சலியை ரசிகர்களே தாமாக முன் வந்து செலுத்தி இருப்பது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சலோமியா பாடல் மட்டுமல்லாமல் கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் ஐகானிக் பாடல்களாக அமைந்து அவரை இன்றும் கொண்டாட காரணமாக உள்ளது.

    English Summary

    Deva: Hundreds of Fans Gather at Late Composer Deva’s Memorial to Pay Musical Tribute by Singing 'Salomea'