தமிழனாக எனக்கு 2 தேசிய விருது கிடைச்சிருக்கு.. தட்டிவிடாமல் என்னை தட்டிக் கொடுங்கள்.. நடிகர் தனுஷ்!

  • திருவள்ளூர்: ராயன் படத்திற்கு 2 தேசிய விருதுகள் தானாகவே கிடைத்துள்ளது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். ஒரு தமிழனாக எனக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்திருப்பதாக கூறிய தனுஷ், தட்டிக் கொடுக்கவிலை என்றாலும், தட்டிவிடாதீர்கள் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதேபோல் ரசிகர்களின் விமர்சனங்களையும் கட்டாயம் மதிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திற்கு 2 தேசிய விருதுகள் சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. சிறந்த படம் மற்றும் நடிகர் என்று இரு விருதுகளை தனுஷ் கைப்பற்றினார். ராயன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றது.

    Advertisement

    இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாள் விழா திருவள்ளூரில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், தனது ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தார். இதன்பின் தனுஷ் பேசுகையில், ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த வருஷம் ராயன் படத்தை விட தேசிய விருது பெற தகுதியான பல படங்கள் நிச்சயமாக இருக்கிறது. அந்த படங்களின் ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

    அதனை நான் முழுமையாக மதிக்கிறேன். ராயன் படத்தை விடவும் மெய்யழகன் மற்றும் மகாராஜா சிறந்த படங்கள்.. இப்போது பார்த்தோம் என்றால், அது ஒரு கனாக்காலம் ரிலீஸாகியது. அப்போது நான் சின்னப் பையன்.. அதனால் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். நானும் நம்பிவிட்டேன்.. ஆனால் கிடைக்கலை.. அதன்பின் புதுப்பேட்டை..

    Advertisement

    அந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும்னு எல்லோரும் சொன்னார்கள்.. நீங்களும் சொன்னீர்கள். ஆனாலும் கிடைக்கவில்லை. அதேபோல் 3, மயக்கம் என்ன, ராஞ்சனா, வடசென்னை, மரியான், கர்ணன் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை.. அப்போதெல்லாம் யாரும் அதனைப் பற்றி பேசவில்லை.. இன்று 90% எதிர்ப்பவர்கள், அப்போது 10% கூட ஆதரவு கிடைக்கவில்லை.. சில விஷயங்கள் முயன்றாலும் கிடைக்காது..

    அது தானாக அமையும்.. அப்படிதான் விருதும் கிடைத்துள்ளது. இந்த முறை எனக்கு அமைந்துள்ளது. அந்தப் படம் எப்படியோ.. ஆனால் அந்தப் படத்திற்கான எங்களின் உழைப்பு உண்மையான உழைப்பு.. ஒரு தமிழனாக எனக்கு இன்னும் 2 தேசிய விருது கிடைத்துள்ளது.. தட்டி விடாதீர்கள்.. தட்டிக் கொடுங்கள்.. எனக்கு தேசிய விருது கிடைக்காத போது, யாருமே அதனைப் பற்றி பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Dhanush: Actor Dhanush Requests Critics to Not Pull Him Down After Raayan Wins Two National Awards