சென்னை: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு சமீபகாலமாக தீவிரமாக எழுந்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ரஜினி மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முன்னெடுப்பை எடுத்திருக்கிறார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். இந்த நிலையில் இருவரும் வேறு வேறு பாதையில் பயணித்தாலும், செல்லப் போகும் இடம் ஒன்றுதான் எனவும், எல்லாம் சுபமாக முடிந்த பிறகு அரசியலில் இணைந்து பயணிக்க இருவரும் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
'நான் அரசியலுக்கு வர்றது உறுதி' என நடிகர் ரஜினிகாந்த் பேசி பத்தாண்டுகள் நெருங்கப் போகிறது. ரஜினிக்கு பிறகு அரசியலுக்கு வருவதாக சொன்ன விஜய் ஆட்சியைப் பிடித்து விட்டார். ஆனால் என்றாவது ஒருநாள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்.. அப்போது நாம் செட்டில் ஆகிவிடலாம் என நினைத்திருந்த பலரும் தற்போது திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் பயணித்து வருகின்றனர்.
சிலர் அண்ணாமலை கட்சிக்கு தாவி விட்டனர். எந்த நடிகருக்கும் இல்லாத அளவு தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் இருந்தது. எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு சினிமா புகழ் கொண்ட ஒரு முகம் ரஜினிகாந்த் தான். அதனால் தான் அவரது அரசியல் வருகையை பலரும் எதிர்நோக்கி இருந்தனர். அதற்கான காலமும் கனிந்தது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஊற்றி வெற்றிடம் நிலவுகிறது. அதனை நிரப்ப நான் வந்திருக்கிறேன் என ரஜினிகாந்த் சொன்னபோது தமிழகமே ஆச்சரிய கடலில் மூழ்கியது. ஒரு வழியாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து விட்டார் என கொண்டாடி தீர்த்தனர் அவரது ரசிகர்கள். ஆனால் கொரோனா அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. உடல் நலனை காரணம் காட்டி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே மாநில அளவு தொடங்கி கிளை அளவிலான நிர்வாகிகள் கட்டமைப்பு ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்துக்கு இருந்தது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் விட்ட இடத்தை பிடிக்க போவதாக மறைமுகமாக சூளுரைத்துள்ளாராம் நடிகர் தனுஷ். தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அரசியல் குறித்த அறிவிப்பு தனுஷின் ஒப்புதலோடு வெளிவரும் என அவரது ரசிகர் மன்றத்தினர் கூறி வருகின்றனர். 'ஏன் நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்க கூடாதா' என சொன்னதில் தொடங்கி தற்போது 'ஏன் நானெல்லாம் அரசியலுக்கு வரக் கூடாதா?' என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார் தனுஷ் என்கின்றனர். இதற்கு விஜய் பெற்ற மிகப்பெரிய வெற்றி ந்துதலாக இருந்ததாக சொல்கின்றனர். இது ஒரு புறம் இருக்க திடீரென தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். மக்கள் மேடை என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்டமைப்பை மீண்டும் உயிர்த்தெழச் செய்வது தான் என்கின்றனர். இந்த நிலையில் தனுஷும் லதா ரஜினிகாந்த் வேறு வேறு பாதையில் பயணித்தாலும் அரசியல் கட்சி என்று வரும்போது மூவரும் ஒன்றாகத்தான் செயல்படுவார்கள் என்கின்றனர். இதில் மூன்றாவதாக ரஜினிகாந்த்தும் இணையப் போகிறார் என்கின்றனர். நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் முன்னாள் மருமகனுக்கு ரஜினி ஆசி எப்போதும் உண்டு என்கின்றனர் தனுஷ் ரசிகர்கள். இந்த நிலையில் ஏற்கனவே இருந்த ரஜினி மக்கள் இயக்க கட்டமைப்பை வலுப்படுத்தி அரசியலுக்கு தயார் செய்து தனுஷோடு இணைந்து பயணிக்க லதா ரஜினிகாந்த் ரெடி என்கின்றனர். அதற்கு முன்னதாக மாநில அளவிலான நிர்வாகிகளையும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளையும் ஒன்று திரட்டி ஆலோசனை கூட்டத்தை நடத்த லதா ரஜினிகாந்த் தயாராகி வருகிறார் என்கின்றனர். இந்த திட்டத்திற்கு ஏற்கனவே ரஜினிக்கு ஆதரவாக இருந்த பலரும் ஓகே சொல்லி உள்ளதாகவும், அவர்களும் மறைமுகமாக சில வேலைகளை பார்த்து வருவதாக சொல்கின்றனர்.ரஜினிகாந்த்
தனுஷ்
லதா ரஜினிகாந்த்
தனுஷ் ரசிகர்கள்
மக்கள் மேடை