தனுஷ், சி.கா அரசியல் பிளான்! மக்கள் ஆதரவு இருக்கா? கேள்வி கேட்ட விஜய்.. உளவுத்துறை சொன்ன பதில்

  • சென்னை: தவெகவை துவக்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப்பிடித்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்து விட்ட விஜய்யை பார்த்து, தமிழகத் தில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் அரசியல் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதில், நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன் ஆகியோர் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

    Advertisement

    தனது ரசிகர்கள் மன்றத்தினருடன் அடிக்கடி சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அரசியல் ரீதியிலான ஆலோசனைக்கூட்டம் போல அதனை பிரமாண்டப்படு த்துவதும், அந்த கூட்டத்தில் அரசியலை மறைமுகமாக சுட்டிக்காட்டுவது போல வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதும் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன் ஆகியோர் வழக்கமாக வைத்துள்ளனர்.

    Advertisement

    இரண்டு ஹீரோக்களின் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளிடம் விசாரித்தால், "எங்கள் தலைவர் அரசியலுக்கு வர முடிவு எடுத்திருக்கிறார். ஆனால், அவசரப்பட்டு ஏக் தம்மில் களமிறங்கக்கூடாது எனவும் நினைக்கின்றார். முதலில் எங்களின் (ரசிகர் மன்றத்தினர்) சிந்தனை எப்படி இருக்கிறது? என்கிற பல்ஸ் பார்க்கிறார். தனிப்பட்ட முறையில் எங்களிடம் பேசும் போது, அரசியல் குறித்து எங்களின் புரிதல் எப்படி இருக்கிறது என்பதை அறிவது தொடர்பாகத்தான் அதிகமாக கேள்வி கேட்கிறார். இடைவெளி விட்டு, விட்டு எங்களுடன் வெளிப்படையான சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதன் மூலம், பொது வெளியில் எப்படிப்பட்ட ரியாக்ஷன் வருகிறது ? ஆளும் கட்சியாக இருக்கும் விஜய்யும் தவெகவும் எங்களை எப்படி கவனிக்கிறார்கள்? என்பதையும் மதிப்பீடு செய்யும் வகையில் எங்கள் தலைவரின் அணுகு முறை இருந்து வருகிறது. அதனால், தமிழக அரசியலுக்குள் நுழையும் விருப்பமும், திட்டமும் அவரிடத்தில் இருக்கிறது " என்று சொல்கின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில், சென்னையில் நேற்று நடந்த முஸ்லீம் லீக் கட்சியின் இளைஞரணி நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நாடாளுமன்றத்துக்கான 2029-ல் நடக்கும் தேர்தலில், இந்தியாவின் வெற்றி என்பது தமிழகத்தில் இருந்துதான் உருவாக் கப்படும். அதனை உடைப்பதற்காகத்தான் புதிய புதிய நடிகர்கள் டெல்லிக்கு செல்கிறார்கள். முகாமிடுகிறார்கள். எந்த நடிகர் டெல்லியில் முகாமிட்டு ள்ளார்? எந்த நடிகர் பொங்கலுக்கு டெல்லி சென்றார் ? எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று ஆவேசமாகப் பேசினார்.

    அவரின் இந்த பேச்சு தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயனை மனதில் நிறுத்தித்தான் பேசியிருக்கிறார் என்று அரசியலில் உற்று கவனிக்கப்படுகி றது. தனுஷ், சிவகார்த்திக்கேயன் ஆகியோரின் பெயரை வெளிப்படையாக கூறாமல், இப்படி மறைமுகமாக சுட்டிக்காட்டி விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏன் வந்தது ? என்பதுதான் ஹை-லைட்டாக எதிரொலிக்கிறது.

    Advertisement

    இது குறித்து ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான தரப்பில் விசாரித்தபோது, "சமீபத்தில் முக்கிய அமைச்சர்களுடனும் ஆலோசகர்களுடனும் கோட்டை யில் தனது அறையிலேயே பல்வேறு விசயங்கள் பற்றி விவாதித்துக் கொண்டி ருந்தார் முதல்வர் விஜய். அப்போது, இரண்டு நாட்களுக்கு முன்பு, உளவுத் துறை கொடுத்திருந்த பல்வேறு தகவல்களுடன் தனுஷ் மற்றும் சிவகார்த்திக் கேயன் தொடர்பான சில தகவல்களும் இடம்பெற்றிருந்த ஃபைல், முதலமைச் சரின் டேபிளில் இருந்தது. அரசின் நிர்வாகம் குறித்த விவாத்தத்திற்குப் பிறகு, நடிகர்களைப் பற்றி கொடுத்திருந்த தகவல் குறித்து பேச்சு வந்திருக்கிறது.

    அப்போது, இவர்கள் நடத்தும் ரசிகர் மன்ற சந்திப்பு கூட்டங்களின் பின்னணி, உளவுத்துறை சொல்வது போல இருக்குமா? அவர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறதா? என்றெல்லாம் கேட்டுள்ளார் விஜய். அதற்கு, உளவுத்துறையின் ரிப்போர்ட் சரிதான். இளைஞர்களையும், புதுமுக வாக்கா ளர்களையும் ஈர்க்கும் சக்தி ஆளானப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு இல்லை. உங்களுக்கு (விஜய்) மட்டும் தான் இருக்கிறது.

    Advertisement

    இன்னும் 2 பொதுத்தேர்தல்களில் உங்களின் இமேஜை உடைக்க பிரதான அரசியல் கட்சிகளால் முடியாது. அதனை உடைக்க வேண்டுமானால், இளைஞர்களையும் புதுமுக வாக்காளர்களையும் ஈர்க்கும் சக்தி என்பது சினிமா ஹீரோக்களுக்குத்தான் இருக்கிறது என பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும் நினைக்கிறது. அந்த வகையில், இந்த ஹீரோக்களின் பின்னணியில் இருந்து இயக்குவது டெல்லிதான். அவர்களை வைத்துத்தான் இளைஞர் சக்திகளை டைலூட் செய்ய முடியும் என டெல்லி திட்டமிடுகிறதுன்னு அமைச்சர்களும், ஆலோசகர்களும் உளவுத்துறை ரிப்போர்ட்டை உறுதி செய்யும் விதத்தில் கருத்து சொல்லியுள்ளனர்.

    இதனை உள்வாங்கிய முதல்வர், டெல்லியுடன் இணக்கமான நட்பைத்தான் நாம் கடைப்பிடிக்கிறோமே...இது அவர்களுக்கும் தெரியும் தானே... அப்புறம் எதற்கு நமக்கு எதிராக இந்த அரசியல்? என கேட்க, பாஜக நேரடியாக ஆட்சி செய்யாத மாநில அரசுகளை இப்படித்தான் எப்போதும் டெல்லி டீல் செய்யும். மத்தியில் பாஜக மட்டுமல்ல, யார் ஆட்சி செய்தாலும் இப்படித்தான் அரசியல் செய்வார்கள்னு விளக்கம் தந்திருக்கிறார்கள் ஆலோசகர்கள்" என்கின்றன விபரமறிந்த வட்டாரங்கள்.

    Advertisement

    இந்த சந்திப்புக்கு பிறகுதான், வாய்ப்பு கிடைக்கும் போது இந்த ஹீரோக் களின் அரசியலில் இருக்கும் டெல்லி பின்னணியை அம்பலப்பத்த வேண்டும் என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதால், அதனை முதன் முதலாக முஸ்லீம் லீக் பொதுக்கூட்டத்தில் துவக்கியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. இனி, அடுத்தடுத்து மற்ற அமைச்சர்களும் இதை மையப்படு த்தியே குரல் கொடுப்பார்கள் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Dhanush and Sivakarthikeyan Political Plans: CM Vijay Queries Intelligence as Aadhav Arjuna Sparks Debate