காமாட்சி விளக்கில் மறைந்துள்ள பாஜக.. டெல்லி பண்ணை வீடு தனுஷின் ரகசிய சந்திப்பு.. என்னங்க இதெல்லாம்

  • சென்னை: தனுஷ் அரசியலுக்கு வருவதாக இருந்தால், விஜய்யின் பாணியை அப்படியே பின்பற்றாமல் வேறு வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். மக்களின் பிரச்சினைகளைப் பேசுவது, மக்களை நேரடியாக சந்திப்பது, கல்லூரி மாணவர்களைச் சந்திப்பது, பொதுவான அமைப்புகளுடன் உரையாடுவது என முயற்சி செய்திருக்கலாம்.. ஆனால், அவர் அப்படியே விஜய் அரசியலையே பின்பற்றுவதாக தெரிகிறது" என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "விஜய்க்குக் கிடைத்த வெற்றியை பார்த்துவிட்டு, திரைப்புகழை வைத்தே அரசியலில் பெரிய வெற்றியைப் பெற்றுவிடலாம் என்று பல நடிகர்களும் நினைக்கிறார்கள். ஆனால், அது சரியான பார்வை கிடையாது.

    Advertisement

    விஜய் - வாக்குகள்

    விஜய்க்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் அவருடைய திரைப்புகழால் மட்டுமே கிடைத்தவை என்று சொல்லிவிட முடியாது. அவருடைய கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் சொந்த செல்வாக்கும், ஏற்கனவே அரசியலில் இருந்த அனுபவமும் இருக்கலாம். எனவே, விஜய்யின் வாக்குகளையும் வேட்பாளர்களின் வாக்குகளையும் தனித்தனியாகப் பார்த்துத்தான் மதிப்பிட வேண்டும்.

    விஜய் ஒரு பெரிய பிம்பமாக உருவெடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரை வீழ்த்தவே முடியாது, அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர்தான் என்று சொல்வதையே, எல்லாக் கட்சிகளின் வாக்குகளையும் அவர் பெற்றுவிட்டார் என்று சொல்வதையோ ஏற்க முடியாது..

    Advertisement
    எல்லோரும் எம்ஜிஆர், விஜய் ஆகிட முடியாது! தனுஷ் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு துரைமுருகன் ஒரே போடு

    தனுஷ் - வாக்கு வங்கி என்ன

    இப்போது தனுஷுக்கும் அதேபோன்ற வேட்பாளர்கள் தேவைப்படுவார்கள்... தனுஷ் பெரிய கதாநாயகன் என்பதற்காகவும், அவரைப் பார்த்துவிட்டோம் என்பதற்காகவும் இளைஞர்களும் இளம்பெண்களும் ஆரவாரம் செய்வது மட்டுமே அவருக்குப் போதுமான வாக்கு வங்கியை உருவாக்கிவிடாது.

    தவெகவில் இருப்பவர்களுக்கு நாளை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் எந்தக் கட்சிக்குச் செல்வார்கள்? ஏதாவது காரணத்தால் தவெகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டால், அவர்கள் திமுகவுக்குச் செல்ல முடியாத சூழலில், அவர்களுக்கு எளிதான மாற்றாகத் தனுஷின் கட்சி இருக்கக்கூடும். அப்போது அவர்களுடைய வாக்குகளையும் தனுஷ் பெறும் வாக்குகளையும் எந்தக் கணக்கில் சேர்ப்பது? அதிமுகவின் நிலையும் இதில் முக்கியமானது.

    Advertisement

    தனுஷுக்கு அரசியல் ஆசை வந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவர் வெற்றி பெறுவாரா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அவருடைய அரசியல் அணுகுமுறையில் விஜய்யின் பாணி தெளிவாகத் தெரிகிறது.

    வெள்ளி காமாட்சி விளக்கில் தாமரை

    அந்த வெள்ளி காமாட்சி விளக்கில் தாமரை இருக்கிறதா என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. அது ஜிஆர்டி நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் அவர்களுடைய நிறுவனத்தின் சின்னம் இருக்கக்கூடும். பாஜகதான் இதற்குப் பின்னணியில் இருக்கிறதென்றால், அவர்கள் தங்களுடைய கட்சிச் சின்னத்தை பயன்படுத்திக் கொடுத்திருப்பார்களா? இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் பாஜகவுக்கு அந்த அடிப்படை அறிவுகூட இல்லையா? அதனால் அந்தக் குற்றச்சாட்டில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை.

    Advertisement

    தனுஷ் டெல்லிக்கு சென்று, அங்குள்ள ஒரு பண்ணை வீட்டில் பாஜக நண்பர்களைச் சந்தித்துப் பேசியதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், நண்பர்களை சந்தித்து ஆலோசனை கேட்பது இயல்பானதுதான். அந்த நண்பர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கலாம். இதை மட்டும் வைத்து தனுஷுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியின் முத்திரையைக் குத்திவிட முடியாது..

    எதிர்க்கட்சிகளின் அரசியல்! உளவுத் துறை எச்சரிக்கை! விஜய்யின் பசும்பொன் பயணம் ரத்து?

    விஜய்யின் வெற்றி

    அதேபோல விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் உள்ள தரவுகளை முழுமையாக ஆய்வு செய்யாமல், அதே வழியில் சென்றுவிடலாம் என்று நினைப்பது சரியான அணுகுமுறை அல்ல. அதேபோல தனுஷின் அரசியல் அணுகுமுறையில் விஜய்யின் பாணி தெளிவாகத் தெரிகிறது.

    Advertisement

    தனுஷ் அரசியலுக்கு வருவதாக இருந்தால், விஜய்யின் பாணியை அப்படியே பின்பற்றாமல் வேறு வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். மக்களின் பிரச்சினைகளைப் பேசுவது, மக்களை நேரடியாக சந்திப்பது, கல்லூரி மாணவர்களைச் சந்திப்பது, பொதுவான அமைப்புகளுடன் உரையாடுவது என முயற்சி செய்திருக்கலாம்..

    ஆனால், பெண்களை கூட்டமாக சந்திப்பது, கல்வி நிதி வழங்குவது, தனுஷைப் பார்த்து சிலர் ஆரவாரம் செய்வது, காமாட்சி விளக்கைப் பரிசாக வழங்குவது என எல்லாமே விஜய்யின் அரசியல் பாணியைப் போலத் தெரிகிறது. இது திராவிட அரசியல் பாணி கிடையாது., டிட்டோ விஜய்யின் அரசியல் பாணி. சினிமா காலகட்டத்தில் அவரை விளம்பரப்படுத்தியவர்கள் பயன்படுத்திய உத்திகள்தான் இப்போது அரசியலிலும் பயன்படுத்தப்படுகின்றன...

    காரைக்குடியில் இன்ஸ்டா பிரபலங்கள் இடையே கள்ளக்காதல்.. சாணியை கரைத்து ஊற்றியதால்.. இப்படி ஆகிடுச்சே

    இன்ஸ்டா ஆதரவு

    இன்ஸ்டாகிராமில் கிடைக்கும் ஆதரவை மட்டும் வைத்து அரசியலில் வெற்றி பெற்றுவிட முடியாது. அந்த ஆதரவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் முக்கியம். விஜய்க்காக இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்தவர்கள், நாளை தனுஷுக்காகவும் விளம்பரம் செய்வார்கள். அவர்கள பொறுத்தவரையில் அது ஒரு வேலை.. அதற்கான ஊதியம் கிடைக்கிறது.

    மக்கள் ஏமாந்திருக்கிறார்கள். தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைப்பதுதான் பிரச்சினை. தனுஷ் அப்படி நினைக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து" என்றெல்லாம் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Dhanush BJP Link.. What Really Happened at the Secret Delhi Farmhouse Meeting in Delhi?