நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. திமுக, அதிமுகவுக்கு இடமே இருக்காது.. விஜய்யின் ஜோதிடர் கணிப்பு!

  • சென்னை: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் கணித்துள்ளார். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே இருக்காது என்று கூறியுள்ள அவர், போட்டி விஜய் vs தனுஷ் என்று மாறும் எனவும் கூறியுள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் அடைந்த வெற்றி தமிழ்நாட்டில் புதிய அரசியல் திருப்பமாக அமைந்துள்ளது. விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷும் அடுத்ததாக அரசியலுக்கு வருவார் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நடிகர் தனுஷ் கடந்த 2 ஆண்டுகளாகவே தன்னுடைய ரசிகர் மன்ற அமைப்புகளை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    Advertisement

    ஒவ்வொரு மாவட்டமாக சென்று ரசிகர்களை சந்திக்கும் தனுஷ், அவர்களுக்கு பிரியாணி போட்டு குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், பெண்களுக்கு சேலை உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். அந்த வகையில் தனுஷ் தன்னுடைய 43வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார். சாமானியர்களுக்கு ஆட்டோ வழங்கி இருக்கிறார். அதேபோல் ரசிகர்களை சமூக சேவையில் ஈடுபட அறிவுறுத்தி இருக்கிறார்.

    இந்த பிறந்தநாள் விழாவில் தனுஷ் பேசுகையில், இவ்வளவு இங்கு கூடி இருக்கிறீர்கள்.. நம் ஒற்றுமைக்கு ஒரு சக்தி உண்டு.. நோக்கமும் உண்டு.. உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உதவுங்கள்.. அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதன் மூலமாக 2031 அல்லது 2036 ஆகிய சட்டசபைத் தேர்தலை தனுஷ் குறி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் நடிகர் தனுஷ் அரசியலில் நுழைந்தால், அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ரிக்கி ராதன் பண்டிட் பேசுகையில், 2031 சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சேர்ந்து வந்து எங்களை எதிர்ப்பார்கள் என்று கணித்திருந்தேன்.

    விஜய்யை வெல்ல வேண்டுமென்றால், திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும். இது திமுக மற்றும் அதிமுக மட்டும் களத்தில் இருந்தால் தான்.. ஒரு வேளை தனுஷ் அரசியலுக்கு வந்தால், திமுக மற்றும் அதிமுக இருக்காது. தனுஷ் 2வது இடத்தை பிடித்துவிடுவார். ஒரு கட்டத்தில் விஜய் - தனுஷ் என்று போட்டி மாறிவிடும். தனுஷின் ஜாதகத்தை பார்த்துள்ளேன். அதனால் எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

    English Summary

    Dhanush: CM Vijay Astrologer Predicts Dhanush's Political Entry, "Future Clash Will Be Vijay vs Dhanush"