சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளி, பொங்கல்! எனக்கு சிறுவயதில் ஞாபகம் இல்லை! தனுஷ் உருக்கம்!

  • சென்னை: பேராசிரியர் சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளியோ பொங்கலோ எனக்கு சிறுவயது முதலே ஞாபகத்தில் இல்லை என அவரது மறைவை எண்ணி வருந்தியுள்ளார் நடிகர் தனுஷ்! கடைசியாக அவரது பட்டிமன்றம் விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்பட்டது.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழே வணங்கும் பேராசிரியர். சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளியோ, பொங்கலோ எனக்கு சிறுவயது முதல் ஞாபகத்தில் இல்லை. இருப்பினும், ராஜா அந்த இடத்திற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.

    Advertisement

    பாப்பையா ஐயா, உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் எங்கள் மனதில் வாழும் என தனுஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் வேதனையை பகிர்ந்துள்ளார்.

    வருத்தம் தெரிவித்த நடிகர் தனுஷ்.. இது யாருடைய தவறு? 'ஓம்' இசை வெளியீட்டு விழாவில் நடந்த சோகம்

    சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்

    தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி நாட்களில் சன் டிவியில் காலை 10.30 மணிக்கு சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் ஒளிபரப்பாகும். இதற்கு பெரும்பாலான தமிழ் மக்கள் ரசிகர்கள் என்றே சொல்லலாம்.

    காலையிலேயே வேலைகளை முடித்துவிட்டு டிவி முன்னாடி வந்து உட்கார்ந்துவிடுவார்கள். இது முடிய ஒரு மணி நேரம் ஆகும். அதிலும் பாப்பையா அளிக்கும் தீர்ப்பு பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக இருக்காது, பெண்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்காது.

    Advertisement

    சிரித்து மகிழ வைக்கும் பட்டிமன்றம்

    அந்த ஒரு மணிநேரம் சிரித்து சிரித்து வயிறே வலிக்க தொடங்கிவிடும். அந்தளவுக்கு அவரது பட்டிமன்றத்தில் காமெடி இருக்கும். வழக்கமாக ராஜாவும் பாரதி பாஸ்கரும் எதிர் எதிரணியில் இருந்து பேசுவார்கள். பெரும்பாலும் பாரதி பாஸ்கருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜாவின் பேச்சு காமெடி கலந்திருக்கும்.

    அன்பு பெரியோர்களே அருமை தாய்மார்களே என பாப்பையா பேசத் தொடங்கும் போது அரங்கமே அதிரும். இவர் வெளிநாடுகளுக்கும் சென்று பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார். திண்டுக்கல் லியோனியின் குரு இவர்தான்.

    எங்கள் புகழை கண்டு சந்தோஷப்பட்ட மனிதர் அவர்.. சாலமன் பாப்பையா மறைவால் கலங்கி போன பாரதி பாஸ்கர்!
    Advertisement

    90 வயதில் காலமானார்

    இப்படிப்பட்ட சாலமன் பாப்பையா கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. மதுரையைச் சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞரும் கூட!, இவர் முதல்வன், பாய்ஸ், சிவாஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    பத்மஸ்ரீ விருது

    30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களா நடத்தியுள்ளார். உலகளவில் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்தியிருப்பார். தமிழ் இலக்கியச் சேவைக்காக இவருக்கு 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

    இரங்கல்

    அவரது சிரித்த முகமும், சிந்தையை கவரும் தமிழ் உள்ளிட்டவற்றால் புகழ் பெற்றவர் சாலமன் பாப்பையா. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

    Advertisement

    கடைசி பட்டிமன்றம்

    கடைசியாக சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், செப்டம்பர் 14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு (அதாவது முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்ட நிகழ்ச்சி) சன்டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் பிறகு தற்போது முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு அவரது பட்டிமன்றம் இல்லாமல் தீபாவளியை கொண்டாடியதற்கு ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனினும் அவருக்கு பதிலாக இன்று ஒளிபரப்பான பட்டிமன்றத்தில் ராஜா நடுவராக இருந்து செயல்பட்டு பட்டிமன்றத்தை நடத்தியது அனைவரையும் கவர்ந்தது. அவருக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். "கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது நிம்மதியே! நெருக்கடியே" என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.